200வது ஆண்டைக் கொண்டாட இருவர் 200 கி.மீ. பெருநடை

புத்தாண்டை வரவேற்பதற்காகவும் சிங்கப்பூரின் 200 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கும் வகையிலும் ஜி. சுரேஷ் குமார், ஆர். சுப்பிரமணியம் இரு வரும் 200 கி.மீ. தூரம் நடந்தனர். ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கை சுற்றி லும் பூங்கா இணைப்புப் பாதை களிலும் 20 கி.மீ. தூரம் இடை விடாமல் நடந்த அவர்கள், சாப் பாட்டிற்கும் காலைக்கடன்களுக் கும் மட்டுமே ஓய்வு எடுத்துக் கொண்டனர். அந்த 200 கி.மீ. நடை ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் தொடங்கி அங்கேயே முடிவடைந் தது. அதில் கலந்துகொண்ட இதர ஆறு பேர் நடக்க முடியாமல் பாதியிலேயே விலகிக்கொண்டு விட்டனர்.

"சிங்கப்பூரர் என்ற முறையில், சிங்கப்பூரின் 200வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. "சிங்கப்பூரில் இத்தகைய நீண்டதூர பெருநடைக்கு இப் போதுதான் முதல் தடவையாக ஏற் பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சி தருகிறது," என்று திரு சுப்பிரமணியம், 55, தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. 160 கி.மீ. நடந்து வந்திருந்த நிலையில் அவர் அந்த செய்தித் தாளிடம் பேசினார். கடந்த சனிக்கிழமை இரவு நடக்கத் தொடங்கிய அந்த இரு வரும் திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு 200 கி.மீ. தூரத்தை நடந்து முடிக்க இருந்தனர். திரு சுரேஷ், 46 வயதான மலேசியர். இவர்கள் இருவரும் 25 ஆண்டுகால நண்பர்கள். பல பெருநடை போட்டிகளிலும் பங் கெடுத்துக் கொண்டவர்கள். திரு சுப்பிரமணியம் சிங்கப்பூரை பிரதி நிதித்து வெளிநாடுகளில் பல போட்டிகளில் கலந்துகொண்டு இருக்கிறார்.

இந்த இருவரும் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 210 கி.மீ. பெருநடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்கள். மலேசியா வின் கோலாலம்பூரில் பத்துமலை யில் தொடங்கிய அந்தப் பெருநடை பாகாங்கில் மாரான் வரை நான்கு நாட்கள் நீடித்தது.

ஜி. சுரேஷ் குமார் (இடது), ஆர். சுப்பிரமணியம் இருவரும் 200 கி.மீ. பெருநடையில் கடைசி வரை நடந்து சாதனை படைத்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!