‘மென்பொருள் பிரச்சினையால் 284 கிரிஸ்ஃபிளையர் உறுப்பினர்களின் தனிநபர் தகவல்கள் கசிந்தன’

சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐஏ) இணையப்பக்கத்தைப் பாதித்த மென்பொருள் பிரச்சினை காரண மாக 284 கிரிஸ்ஃபிளையர் உறுப் பினர்களின் தனிப்பட்ட தகவல் களை மற்ற வாடிக்கையாளர்கள் பார்க்க நேர்ந்ததாக எஸ்ஐஏ தெரி வித்துள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை இவ்வாறு நடந்ததாக பல புகார்கள் பெறப்பட்டுள்ளதாக எஸ்ஐஏ நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார். குறிப்பிட்ட சில சூழல்களில் சிலர் தங்களது கிரிஸ்ஃபிளையர் கணக்குக்குள் நுழைய முற்பட்ட போது பிற வாடிக்கையாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரிகள், கணக்கு எண்கள், உறுப்பினர் நிலைகள், கிரிஸ்ஃபிளையர் தூரம், பரிசுகள், பயண விவரங்கள், சிலரது கடவுச்சீட்டு விவரங்கள் போன்றவற்றைக் காண நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

"வேற்று நபர்கள் எங்களது இணையப்பக்கத்துக்குள் ஊடு ருவும் முயற்சியாக இது நிகழ வில்லை," எனவும் மென்பொருளில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைதான் இது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் பிற்பகல் 12.15 வரை எஸ்ஐஏவின் இணையப் பக்கத்தில் இருந்த இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிட்ட தாகவும் இதுபோன்று இனிமேல் நிகழாது எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டது. பாதிக்கப்பட்ட வாடிக்கை யாளர்களிடம் மன்னிப்புக் கோரிய அந்நிறுவனம், இதன் தொடர்பில் அவர்களுக்கு உதவி வருகிறது. மேலும், இது குறித்து தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திற்கும் எஸ்ஐஏ தாமாக முன்வந்து தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!