“டாக்டர் மகாதீருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறல்ல”

ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிங்கப்பூர்-மலேசிய பிரச்சி னைகள் தொடர்பில் மலேசியப் பிரதமர் மகாதீருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதை சிங்கப் பூர் மாணவரான டேரியன் மோகன் தற்காத்துப் பேசியுள்ளார்.

அடிப்படையிலேயே ஆக் ஸ்ஃபர்ட் சங்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒரு சிறந்த விவாத மேடை என்று 22 வயது மாணவர் டேரியன் மோகன் குறிப்பிட்டார்.
“தலைவர்கள் கூட்டத்தில் பேசும்போது கடுமையான கேள்விகளை எதிர்கொள்வது பாரம்பரியம்,” என்றும் ஸ்ட்ரெய் ட்ஸ் டைம்சுக்கு மின் அஞ்சல் மூலம் அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

பிரிட்டனின் பெருமைமிகு விவாத மேடையான ஆக்ஸ் ஃபர்ட் சங்க நிகழ்ச்சியின்போது டாக்டர் மகாதீரிடம் டேரியன் மோகன் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அந்த ஆறு நிமிட காணொளி சமூக ஊடகங் களில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜனவரி 18ஆம் தேதி பதி வேற்றப்பட்ட காணொளிக்கு 7,500 பேர் விருப்பப் பதிவு செய் திருந்தனர். சுமார் 5,700 பேர் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டனர். 1,400 பேர் காணொளி குறித்து கருத்து களைப் பதிவிட்டிருந்தனர்.

டேரியன் மோகனுக்கு பலர் ஆதரவாகக் குரல் கொடுத் திருந்தாலும் சிலர் குறைகூறியி ருந்தனர்.