துணிகரப் பயணம்: சிங்கப்பூரர்களில் இருவரில் ஒருவர் நாட்டம்

சிங்கப்பூரர்களில் இரண்டு பேரில் ஒருவர் துணிகரச்செயல் சுற்றுப் பயணிகளாக இருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள புதுப்புது இடங்களைப் பார்த்து பலவற்றையும் கண்டறிய அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். ‘ஸ்கைஸ்கேனர்’ என்ற சுற்றுப் பயண இணையத் தேடுதளம் நடத்திய ஆய்வில் 511 சிங்கப்பூ ரர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். நகரமய சூழலில் பழக்கப் பட்டவர்களாக இருந்தாலும் சிங் கப்பூரர்கள் துணிகரப் பயணங் களை மேற்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 45% விடு முறையில் புதிய புதிய துணிகரச் செயல்களை முயற்சித்துப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். இந்த ஆண்டு சுற்றுலா செல்ல திட்டங்கள் உண்டா என்று கேட்ட போது, முதல்தடவையாக புதிய இடத்திற்குச் செல்ல தாங்கள் திட்டமிடுவதாக 82 விழுக்காட்டி னர் கூறினர். எத்தியோப்பியா, குவாட்டமாலா, ஈரான், ஏமன் ஆகிய இடங்களைப் புதிய இடங்களுக்கு எடுத்துக் காட்டாக அவர்கள் குறிப்பிட்டனர். ஓர் இடத்திற்குச் சுற்றுலா செல் லப்போவதாக தெரிவித்தவர்களில் 18 விழுக்காட்டினர் அந்தச் சுற்று லாப் பயணத்தை வினோதமான முறையில் தாங்கள் மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்தனர். தங்களுக்குத் தெரியாத பல இடங்களுக்கும் சென்று புதுப்புது நிலவரங்களைக் காண விரும்புவ தாக அவர்கள் கூறினார்கள்.