உற்பத்தி, புத்தாக்க உதவித் திட்ட கோரிக்கை மோசடி: சந்திரனுக்கு 50 மாத சிறைத் தண்டனை விதிக்க வலியுறுத்து

அரசாங்க திட்டம் ஒன்றில் முன்­வைக்கப்பட்ட பொய்யான கோரிக்­கைகள் குறித்த வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட மோசடிக்காரரான எஸ்.சந்திரனுக்கு குறைந்தது நான்கு ஆண்டுகள், இரு மாதம் சிறைத் தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தில் நேற்று அரசாங்க தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்­தினார்.
மாயாஜால வித்தை கலைஞ­ரான 37 வயது சந்திரன், உற்பத்தி மற்றும் புத்தாக்க உதவித் திட்டத்­தில் மோசடியான கோரிக்­கைகளைச் சமர்ப்பிக்க 49 பேருக்கு உதவி இருந்தார். 
அதன் தொடர்பில் $1.1 மில்லி­யனுக்கும் அதிகமான வழங்கீட்டுத் தொகையைப் பெற அவர்கள் முயற்சி செய்தனர். உற்பத்தி, புத்தாக்க உதவித் திட்டத்தை நிர்வகிக்கும் உள்நாட்டு வருவாய் ஆணையம், கோரப்பட்ட தொகை­யில் $876,684ஐ வழங்கியது.
இந்த வழக்கில் மிகப் பெரிய அளவிலான தொகை சம்பந்தப்­பட்டிருப்பதாக அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர் வீ.ஜேசு­தேவன் வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் சந்திரனை வழக்கறிஞர் எவரும் பிரதிநிதிக்க­வில்லை. மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோவிடம் சந்திரன் முன்வைத்த தண்டனை குறைப்பு மனுவில், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்­கூடிய ஒரே நபர் தாம் என்றும் தம்மிடம் இப்போது பணம் எதுவும் இல்லை என்றும் கூறினார். அவரது பெற்றோருக்கு சுகாதாரப் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
திருமணமாகி ஒரு ஆண் பிள்ளைக்குத் தந்தையான சந்திரன், தாம் சிறையில் அடைக்­கப்பட்டால் தமது அன்புக்குரிய­ வர்களின் நிலைமை என்னவாகும் என்பது குறித்து தமக்குத் தெரி­யாது என்று நீதிமன்றத்தில் கூறினார்.
வருமான வரி சட்டத்தின்கீழ், $400,000க்கும் அதிகமான வழங்­கீட்டுத் தொகை, ‘போனஸ்’ தொடர்பிலான 18 குற்றச்சாட்டு­களை கடந்த ஆண்டு நவம்பரில் சந்திரன் ஒப்புக்கொண்டார். எஞ்சிய தொகையில் தொடர்பான 40 குற்றச்சாட்டுகளும் கருத்தில்­ கொள்ளப்பட்டன.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி