ஓஃபோ உரிமம் திடீர் ரத்து

ஓஃபோ உரிமம் திடீர் ரத்து

1 mins read

சிங்கப்பூரில் சைக்கிள் பகிர்வு சேவையை வழங்கி வரும் சீன நிறுவனமான 'ஓஃபோ'வுக்கு வழங்கப்பட்ட உரிமம் தற்காலிக மாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று இதனை தெரிவித்தது. 'கியூஆர்' அடிப்படையில் சைக்கிள் நிறுத்தும் முறையை செயல்படுத்த வேண்டும் என்று அந்த நிறுவனத்துக்கு ஆணை யம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு புதன் கிழமை வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் 'கியூஆர்' முறையை அது செயல்படுத்தவில்லை. இதையடுத்து அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படு வதாக ஆணையம் குறிப்பிட் டது. 2017 முற்பகுதியிலிருந்து சிங்கப்பூரில் செயல்படும் ஓஃபோ நிறுவனத்துக்கு பொது இடங்களி லிருந்து அதன் சைக்கிள்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும் ஆணையம் காலக்கெடு விதித்திருந்தது.2019-02-15 06:00:00 +0800