2023ஆம் ஆண்டுக்குள் புக்கிட் கோம்பாக்கில் புதிய தேசிய சேவை மையம்

தேசிய சேவையாளர்களுக்கான சேவைகளை ஒரே கூரையின்கீழ் இணைக்கும் புதிய மையம் 2023ஆம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒன்பது காற்பந்து திடல்களின் பரப்பளவில் அமையவுள்ள இந்த மையம், புக்கிட் கோம்பாக்கில் அப்பர் புக்கிட் தீமா சாலைக்கு அருகே கட்டப்படும்.தேசிய சேவையில் சேரவிருப்பவர்களுக்கான மருத்துவச் சோதனை உள்ளிட்ட சேவைகள் இனிமேல் அங்கு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரில் பற்பல இடங்களில் சிதறியிருக்கும் சேவை இடங்களைப் புதிய தேசிய சேவை மையம் ஒரே இடத்தில் இணைக்கும்,” என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தனது அமைச்சுக்கான வரவு செலவு உரையில் தெரிவித்தார். முக அடையாளம், சுய இயக்கம் உள்ளிட்ட கூறுகளைக் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப மையமாக அது திகழும் என்று டாக்டர் இங் கூறினார்.