‘உண்மையைத் திரித்துக் கூறுகிறார் மகாதீர்’

தண்ணீர் உடன்பாடு பற்றி மலே சியப் பிரதமர் மகாதீர் முகம்மது உண்மையைத் திரித்துக் கூறி இருக்கிறார் என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1962ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் செய்யப்பட்ட தண்ணீர் உடன்பாடு குறித்து ஜோகூர் மக்கள் எதிர்ப்புக்குரல் கொடுக்க வேண்டும் என்று அவர்  கூறியிருப் பது “உணர்ச்சிகளைத் தூண்டும் கடுமையான வார்த்தைகள். சந்தே கத்துக்கு இடமின்றி, பொதுமக்கள் கருத்தைத் தட்டியெழுப்பக்கூடி யவை,” என்றார் டாக்டர் விவியன். 

மலேசியாவிடமிருந்து சிங்கப் பூர் சுத்திகரிக்கப்படாத நீரை நியாயமற்ற விலையில் வாங்குவது தார்மீகப்படி தவறு என்று புத்ரா ஜெயாவில் நடந்த ஜோகூர் அர சாங்கத்தின் ஓய்வுத்தள சந்திப்பில் மகாதீர் கூறியிருந்தார்.
வெளியுறவு அமைச்சின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இது குறித்துப் பேசிய டாக்டர் விவியன், பணக் கார நாடான சிங்கப்பூர் தாராள மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என மகாதீர் குறிப்பிட் டதைச் சுட்டினார்.
1962ஆம் ஆண்டின் தண்ணீர் உடன்பாடு குறித்துப் பேசிய டாக்டர் விவியன், “இது ஏழை, பணக்காரர் என்பது பற்றியதல்ல. மாறாக, ஒப்பந்தத்தின் புனிதத்தை மதிப்பது பற்றியதாகும்,” என்றார்.
1965ல் சிங்கப்பூரும் மலேசியா வும் பிரிந்தபோது ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தை மீறுவது, சுதந்திர இறையாண்மை கொண்ட நாடாக சிங்கப்பூர் விளங்குவதற்கு அடிப்படையாகத் திகழும் அந்த ஒப்பந் தத்தையே கேள்விக்குறியாக்கும் என்று கூறினார்.