ஆய்வு: பத்தில் ஒருவர் மட்டுமே மின்கழிவை மறுசுழற்சி செய்கிறார்

இளம் சிங்கப்பூரர்களில் பத்தில் ஒருவர் மட்டும் மின்கழிவை மறுசுழற்சி செய்வதாகவும் அவர்களில் 34 விழுக்காட்டினர் அதைத் தவறாக செய்வதாகவும் ஆக அண்மைய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரின் ஒரே ஒரு குப்பை நிரப்பும் நிலமான ‘செமாக்காவ்’ தீவு செயல்படும் காலகட்டத்தை நீட்டிக்க இந்தப் போக்கு மாறவேண்டும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார். மின்கழிவு மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மின்கழிவில் உள்ள நச்சுப் பொருட்கள், செமாக்காவ் தீவில் குவிக்கப்படும் சாம்பலுடன் கலக்கப்படுவதாகச் சொன்னார். சிங்கப்பூரர்கள் சரியான முறையில் மறுசுழற்சி செய்து செமாக்காவ் தீவு இன்னும் பல காலம் நிலைத்திருக்க உதவ வேண்டும் என்று அவர் கூறினார்.