புக்கிட் தீமா விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் திங்கட்கிழமை ( மார்ச் 4ஆம் தேதி) காலை டாக்சிக்கும் காருக்கும் இடையே ஏற்பட்ட விபத்தில் 61 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

கவனக்குறைவால் மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டின்பேரில் அந்த 73 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பற்றிய தகவல் பின்னிரவு 1.48 மணிக்குக் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.  

மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதாக உறுதி செய்யப்பட்டது. அவர் ஒரு மலேசியர் எனக் கூறப்படுகிறது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்