இணையப் பாதுகாப்பு பொருட்களுக்கு அனைத்துலக அங்கீகார சான்றிதழ் 

சிங்கப்பூரில் உருவாக்கப்படும் இணையப் பாதுகாப்பு பொருட்களுக்கு அனைத்துலக அங்கீகார தரத்துடன் சிங்கப்பூரிலேயே தற்போது சான்றிதழ் பெறமுடியும். தங்கள் பொருட்களுக்கு அனைத்துலக அளவில் அங்கீகாரம் பெறுவதில் உள்ளூர் மேம்பாட்டாளர்கள் எதிர்கொண்டுவந்த தடைகளை இது குறைக்கும். பொது தகுதி அங்கீகரிப்பு நாடாக தற்போது சிங்கப்பூர் உள்ளது. இதனால், 30 நாடுகள், நிறுவனங்கள் பின்பற்றும் பொருட்களுக்கான தர சான்றிதழான, பொருட்களுக்கு பொது தகுதி தரநிலை (சிசி) சான்றிதழை சிங்கப்பூர் வழங்கலாம்.