ஊழியர் மேம்பாட்டுக்கு முதலிடம்

தங்களது திட்டங்களுக்காக அரசாங்க மானியங்களைப் பெறும் நிறுவனங்கள், ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்துவது, புதிய வேலைகளை உருவாக்குவது, வேலைகளை மாற்றியமைப்பது, அதிகமான முதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற ஊழியர் களின் மேம்பாட்டிலும் கடப்பாடு கொண்டிருக்க வேண்டும். 
இந்தப்போக்கை ஊக்குவிக்கும் வகையில் 2020 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டம் (IGP), தொழில் நிறுவன மேம்பாட்டு மானியம் (EDG) ஆகிய இரு திட்டங்கள் இணைக்கப்படுகின்றன. வர்த்தகங்கள் வளர்ச்சி காணும்போது ஊழியர் மேம்பாட்டுக்கு முதலிடம் கொடுப்பது, தொழில் நிறுவனங்களின் உருமாற்றக் கொள்கையில் அரசாங்கத்தின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக விளங்குகிறது என்று தெரிவித்தார் வர்த்தக தொழில் அமைச்சுக்கான மூத்த துணையமைச்சர் கோ பூ கூன்.