அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராக நிறுவனங்களுக்கு பல்வேறு உதவிகள்

அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராக சிங்கப்பூர் தொடர்ந்து உலக நாடுகளுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அதற்கு ஒருவழி, சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் பயன்பெற உதவும் வகையில் உள்ளூரில் திறனாளர்களை வளர்ப்பது என்று  வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நிறுவனங்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவை, வெளிநாட்டுச் செயல்பாடுகளுக் குத் தேவையான திறன்கள் போதா மையால்  உலகமயமாவதில் சிரமப் படுகின்றன என்று  அவர் கூறினார்.
“இந்தப் பிரச்சினையை எதிர் கொள்ள,  சந்தை பற்றிய அறிவு முதல் வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டறிவது, வெளிநாட்டுச் சந்தைகளில் சவால்களைச் சமாளித்துச் செயல்படுக்கூடிய உள்ளூர் திறனாளர்களை வளர்க்க வேண்டும்.
இதில், இந்த ஆண்டு அறி முகம் கண்ட திறனாளர்களை உலகமயமாதலுக்கு தயார்படுத்தும் திட்டம், உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள், வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூர் நிறுவனங் களில் பணிப்பயிற்சி பெற ஆதரவளிக்கிறது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்