ஆதரவற்றோருக்கான நிதியுதவி அதிகரிப்பு

‘காம்கேர்’ நீண்டகால உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படவுள்ளது.
முதுமை அல்லது உடல்நலக் குறைவு காரணமாக நிரந்தரமாக வேலை செய்ய இயலாதோர், குடும்ப ஆதரவு குறைவாக உள்ள அல்லது அறவே இல்லாதவர் களுக்கு ‘பொது உதவி’ என்றும் அழைக்கப்படும் இந்தத் திட்டத் தின்மூலம் மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களில் பெரும்பாலானோர் மூத்த சிங்கப்பூரர்கள். பொது உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப் படும் நிதியுதவி அதிகரிப்பால் கிட்டத்தட்ட 4,000 குடும்பங்கள் பயனடையும்.
ஒருவர் மட்டுமே உள்ள குடும் பங்களுக்கான மாதாந்திர உதவித் தொகை 500 வெள்ளியில் இருந்து 600 வெள்ளியாக உயர்த்தப்படு கிறது.  இரு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கான உதவித்தொகை $870லிருந்து $1,000ஆக அதிகரிக்கிறது.

இந்த மாற்றங்கள் இவ்வாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நடப் பிற்கு வரும்.
இதனிடையே, காம்கேர் குறுகிய, நடுத்தர கால உதவித் திட்டத்தின் புதிய பயனாளிகளும் ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகும் அந்த உதவி நீடிக்கும்படி புதுப்பித்துக் கொண்டுள்ளவர்களும் கூடுதல் உதவித்தொகையை எதிர்பார்க்க லாம்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ இந்த விவரங்களை நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.
குடும்பங்களின் தேவைகள், நிதிநிலையைப் பொறுத்து காம்கேர் குறுகிய, நடுத்தர கால உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித்தொகை மாறுபடுகிறது என அமைச்சர் லீ குறிப்பிட்டார்.

எடுத்துக்காட்டாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாடகை வீட்டில் வசிக்கும் இருவர் அடங்கிய குடும்பத்தில் ஒருவர் மட்டும் பகுதி நேர வேலை மூலம் $500 வருமானம் ஈட்டினால் அக்குடும் பத்திற்கு மாதந்தோறும் $360 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூலை முதல் அந்தக் குடும்பம் கூடுதலாக $200 நிதியுதவியை எதிர்பார்க்கலாம்.