வாடகை வீட்டிலுள்ள குடும்பங்களுக்கு சமூக இணைப்பு உதவித் திட்டம்  

பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள வசதி குறைந்த, பாதிப்படையக்கூடிய குடும்பங்களுக்குக் கூடுதல் ஒருங்கி ணைப்பும் முழுமையான ஆதரவும் வழங்க சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு சேவை மையங்களை அமைக்கவுள்ளது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று பேசினார். 
அமைச்சு ‘கமியூனிட்டி லிங்க்ஸ்’ என்ற பெயரில் முதல் நான்கு சமூகச் சேவை மையங்களை அடுத்த ஈராண்டுகளில் ஜாலான் குக்கொ, மார்சிலிங், கெம்பாங் கான்-சைச்சீ, பூன் லே ஆகிய வட்டாரங்களில் அமைக்கும். வாடகை வீடுகள் உள்ள வட்டாரங்களில் அமைந்திருக்கும் இம்மையங்கள் வழி சமூக மற்றும் இதர சேவைகளைக் குடும்பங்களுக்கு வழங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

சமூகச் சேவை அலுவலகங்கள் தொண்டூழிய அமைப்புகள், அரசாங்க நிறுவனங்கள், அடித்தள அமைப்புகள் போன்றவற்றுடன் இணைந்து குடும்பங்களின் தேவைகளை அறிந்திடவும் அதற்கேற்பத் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றை வழங்கிடவும் முற்படும். எளிதில் பாதிப்படையக்கூடிய இளையர்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு புதிய திட்டம் பூன் லே, ஜூரோங்வெஸ்ட் வட்டாரங்களில் உள்ள பள்ளிகள், தொண்டூழிய அமைப்புகள் மற்றும் பல குழுக்களுடன் இணைந்து இளை யர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைத்திடச் செய்யும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது