வழக்கநிலை மற்றும் அதன் சாதக மற்ற விளைவுகள் பற்றிய கவலை கள் இருக்கின்றன. ஆனால், அதே வேளையில் தரம் பிரித்தல் இல்லை என்றால் சமூகப் படிநிலை மேலும் மோசமாகியிருக்கும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று மன்றத்தில் விளக்கினார். 1970களில் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் மூன்றில் ஒருவர் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுவார். இன்று அந்த விகிதம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ளது.
"ஆக, சமூகப் படிநிலையையும் தரம் பிரித்தலையும் சாதாரணமான ஒன்றாக வைத்து பார்க்க வேண் டாம் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன். காரணம், தரம் பிரித்தல் முறை மூலம் தொடர்ந்து படிப்பைப் பாதியிலேயே விட்டுச் செல்லும் மாணவர்களின் விகிதத்தைக் குறைக்கவில்லை என்றால் நிலைமை மேலும் மோச மாகியிருக்கும்," என்றும் அமைச் சர் விவரித்தார். "1994ஆம் ஆண்டில் அறிமுக மான வழக்கநிலை (தொழில்நுட்பம்) பிரிவு, இதற்கு பெரிதும் உதவியது. ஆக, இன்று வரை நாம் திறன் சார்ந்த கல்வி முறையால் பலன் அடைந்து வருகிறோம்.

