கடந்த ஏழு ஆண்டுகளில் சிங்கப்பூரில் வசித்த 2,400 வெளிநாட்டினருக்கு ‘ஹெச்ஐவி’ நோய்

கடந்த ஏழு ஆண்டுகளில் சிங்கப்பூரில் வசித்த கிட்டத்தட்ட 2,400 வெளிநாட்டினருக்கு ‘ஹெச்ஐவி’ நோய் இருந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தற்போது சிங்கப்பூரில் வசிக்கவில்லை. என்று சுகாதார அமைச்சு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குப் புள்ளிவிவரங்களை வெளியிட்டபோது தெரிவித்தது. அவர்களில் சிலருக்கு ‘ஹெச்ஐவி’ இருக்கும் விவரம், அவர்கள் இங்கு வேலை செய்ய வந்த பின்னர் கட்டாயச் மருத்துவப் பரிசோதனைகளின் வழி கண்டு பிடிக்கப்பட்டது. வேறு சிலருக்கு ஏற்கெனவே இங்கு சில காலம் வேலை செய்த பின்னர் அந்த நோய் தொற்றிக்கொண்டது.

கடந்த ஏழு ஆண்டுகளில் சிங்கப்பூரில் வசித்த கிட்டத்தட்ட 2,400 வெளிநாட்டினருக்கு ‘ஹெச்ஐவி’ நோய் இருந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. அவர் களில் பெரும்பாலானோர் தற்போது சிங்கப்பூரில் வசிக்க வில்லை என்று சுகாதார அமைச்சு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது. அவர்களில் சிலருக்கு ‘ஹெச்ஐவி’ இருக்கும் விவரம், அவர்கள் இங்கு வேலை செய்ய வந்த பின்னர் கட்டாய மருத்துவப் பரிசோதனைகளின் வழி கண்டு பிடிக்கப்பட்டது. வேறு சிலருக்கு இங்கு சில காலம் வேலை செய்த பின்னர் அந்த நோய் தொற்றிக் கொண்டது.

‘ஹெச்ஐவி’ பதிவகத்தில் இடம்பெற்றுள்ள 8,800 வெளி நாட்டினரையும் கணக்கில் கொண்ட பின்னர் இந்நோய்  உள்ள மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 11,200 ஆக உள்ளது. பதிவகத்தில் 8,800 வெளிநாட்டினர் இடம்பெற்றுள்ள தகவலை அமெரிக்க மோசடிக் காரன் மிக்கி புரோச்செஸ் ஜனவரியில் கசியவிட்டான். பதிவகத்தில் இடம்பெற்றுள் ளோரில் மூன்றில் இரண்டு பங்கி னர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர் கள். சிங்கப்பூரர்,  நிரந்தர வாசிகளில் தற்போது 8,138 பேர் ‘ஹெச்ஐவி’ நோயாளிகள் என்று பதிவகம் குறிப்பிடுகிறது. 

“ஹெச்ஐவி சோதனைக்கு சிங்கப்பூரில் வசிக்கும் வெளி நாட்டினர் அனைவரும் கட்டாயம் செல்லவேண்டும். ஆனால் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தவாசி களுக்கும் இந்தச் சோதனை கட்டாயமில்லை. இதனால் பதிவகத்தில் இருக்கும் பெரும் பாலானோர் வெளிநாட்டவர்களாக உள்ளனர்,” என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

‘ஹெச்ஐவி’ தொற்றியுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர் சிங்கப்பூரில் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆயினும், அவர்கள் தொடர்ந்து சுற்றுப்பயணிகளாக சிங்கப் பூருக்கு வரலாம். சிங்கப் பூரர்களைத் திருமணம் செய்த ‘ஹெச்ஐவி’ நோயாளிகளின் விண்ணப்பம் தனித்தனியாக ஆராயப்படும் என்று அமைச்சு கூறியது.சிங்கப்பூரில் உள்ள ‘ஹெச் ஐவி’ நோயாளிகளில் பெரும்பாலா னோர் பாலியல் தொழிலாளிகளாக வும் வெளிநாட்டு ஊழியர்களாகவும் இருப்பதாகச் சமூக ஊழியர் கள், மருத்துவர்கள் ஆகியோரிட மிருந்து தெரிந்துகொண்டதாக ‘ஆக்ஷன் ஃபார் எயிட்ஸ்’ என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்தது. அந்த அமைப்பு உதவி செய்யும் ஊழியர்களில் பலர் மலேசியாவைச் சேர்ந்த உடல் உழைப்பு ஊழியர்கள் என்று அதன் நிர்வாகி அவின் டான் தெரிவித்தார். அவர்களில் சிலர் தங்கள் வாழ்நாளில் பாதியை சிங்கப் பூரிலேயே கழித்ததாகவும் சிங்கப் பூரைத் தங்களது இல்லம் என்று கூறிக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்