எலும்பு மஜ்ஜை புற்றுநோய் சிகிச்சையில் புதிய முன்னேற்றம்

‘மல்டிபல் மைலோமா’ எனப்படும் ஒரு வகையான எலும்பு மஜ்ஜைப் புற்றுநோய் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 150 சிங்கப்பூரர்களைப் பாதிக்கிறது. அவர்களில் 25 முதல் 35% வரை அதிக அபாய நிலையை அடைகிறார்கள். பொது வாக இந்நிலையை அடைவோர் மொத்தமாக  ஏறத்தாழ 2 அல்லது 3 ஆண்டுகள்தான் வாழமுடியும்.  
‘மல்டிபல் மைலோமா’ வழக்க மாக 60 வயதுக்கும் மேற்பட்டவர் களை அதிகமாகத் தாக்கும் என் றும் இந்த நோய்க்கு முழுமை யான தீர்வு இல்லை என்றும் கூறி னார் சுமார் 15 ஆண்டுகளாக ‘ஹீமட்டோலஜி’ எனப்படும் ரத்த சம்பந்தமான நோய்களுக்கான நிபு ணராக உள்ள டாக்டர் சந்திர மௌலி நாகராஜன், 41. 
இந்த நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவும் வண்ணம் புதிய முன்னோட்ட சிகிச்சை முறையை சிங்கப்பூர் பொது மருத்துவமனை கையாண்டு வரு கிறது. அதில் டாக்டர் சந்திர மௌலியும் ஈடுபட்டுள்ளார்.  
“மற்ற புற்றுநோய்கள் போல இல்லாமல், மைலோமா நோயாளி களுக்கு, வெளிநோயாளி சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
“முதல் கட்ட சிகிச்சை சுமார் 4 முதல் 6 மாதங்கள் வரை நீடிக் கும். அதன்பின் மூல உயிரணு மாற்று சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சையைப் பெறும் கிட் டத்தட்ட 20 முதல் 30 விழுக்காட்டி னருக்குப் புற்றுநோய் தொடர்பான அணுக்கள், உடம்பில் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக் குக் குறைகின்றன,” என்றார் டாக்டர் சந்திரமௌலி. 2019-03-12 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணொளி எடுக்கப்பட்ட மாணவி மோனிக்கா பே. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

22 Apr 2019

கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரும் மனு

ஹோங் கா நார்த் தொகுதியில் நேற்று நடைபெற்ற டெங்கிக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இளைய தொண்டூழியர் ஒருவர், முதிய குடியிருப்பாளர் ஒருவருக்கு டெங்கி தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார். படம்: சாவ் பாவ்

22 Apr 2019

டெங்கி சம்பவங்கள் மும்மடங்கு அதிகரிப்பு

சான் ஃபிரான்சிஸ்கோ தொழில்நுட்பக் கருத் தரங்கில் பங்கேற்ற (இடமிருந்து) ‘ஸ்ட்ரிப்’ நிறுவனத் தலைமை நிர்வாகி திரு பேட்ரிக் கொலிசன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

22 Apr 2019

‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’