மின்னஞ்சல் மூலம் நிறுவனங்களில் மோசடி: மிக எளிதில் பாதிப்படையும் நாடாக சிங்கப்பூர்

நிறுவனங்களைக் குறிவைத்து மின்னஞ் சல் மூலம் செய்யப்படும் மோசடி காரியங் களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய ஒரு நாடாக சிங்கப்பூர் உள்ளது. அதோடு, பாதகமான இணைய முகவரி களுக்கு இடம்கொடுக்கக்கூடிய மிகப் பிரபலமான இடமாகவும் சிங்கப்பூர் இருக் கிறது. 
இணையப் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்கித் தரும் ‘டிரண்ட் மைக்ரோ’ என்ற நிறுவனம் இவ்வாறு தெரிவிக்கிறது.
இதில் மலேசியா, இந்தோனீசியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 
இத்தகைய தில்லுமுல்லு மின்னஞ்சல் களில் கணினிகளைக் கெடுத்துவிடக் கூடிய வைரஸ் கிருமிகள் பொதுவாக இருக்காது என்பதால் இத்தகைய மின் னஞ்சல்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்து பெரும்பாலும் தப்பிவிடும் என் பதை டிரண்ட் மைக்ரோ சுட்டியது. 
தென்கிழக்கு ஆசியாவில் இந்த நிறு வனம் கண்டுபிடித்த நிறுவன மின்னஞ் சல் மோசடிகளில் சுமார் 27.3 விழுக்காடு சிங்கப்பூரில் நிகழ்ந்து இருக்கின்றன.