பெண்களைச் சிறப்பிக்கும் புதிய விருது விழா   

சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையின் பெண்கள் தொழில்முனைவர் கட்டமைப்பு முதல் முறையாக ‘இந்த ஆண் டின் சிறந்த பெண்கள்’ எனும் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. அதில் வெவ் வேறு சாதனைகளைப் புரிந்து பல வயதினரைச் சேர்ந்த பெண் கள் கௌரவிக்கப்படவிருக்கின்ற னர்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையின் 95வது ஆண்டு நிறைவின் ஓர் அங்க மாக இந்த விருதுகள் இவ் வாண்டு அறிமுகப்படுத்தப்பட் டுள்ளன.
இந்த விருது விழா அடுத்த மாதம் 25ஆம் தேதியன்று ‘தி ரிட்ஸ் கார்ல்டன் மில்லேனியா’ ஹோட்டலில்  இரவு 7.30 மணிக்கு இடம்பெறும்.