குழந்தையை அறைந்து போலிசிடம் பொய் கூறியவருக்கு சிறை

15 மாதக் குழந்தையை அறைந்த குற்றத்துக்காகப் பராமரிப்பாளருக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை மருந்து சாப்பிட மறுத்ததால் கோபமடைந்த அந்த 41 வயது பராமரிப்பாளர் அறைந்தார்.
அதன் காரணமாக குழந்தையின் முகம் சிவந்தது. மாட்டிக்கொள்ளாமல் இருக்க அடையாளம் தெரியாத ஒருவர் குழந்தையை அறைந்ததாக அந்தப் பராமரிப்பாளர் பிறகு கதை கட்டினார். குழந்தையைத் தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு சென்றபோது தங்களை நோக்கி ஆடவர் ஒருவர் வந்ததாகவும் அவர் யாரையோ அறையும் சத்தம் கேட்டதாகவும் பராமரிப்பாளர் கூறினார். அதன் பிறகு குழந்தையின் முகம் சிவந்திருந்ததைக் கண்டதாக அவர் சொன்னார். சிறிது நேரம் கழித்து குழந்தை படுக்கையிலிருந்து விழுந்ததால் முகம் சிவந்தது என்று கதையை மாற்றினார்.