ஆற்றல், யோசனைகள் திரளும்   நாடாக நாம் திகழவேண்டும்

உலகில் பொருளியலும் புவியியல் சார்ந்த அரசியல் நிலவரங்களும் மாறி வருகின்றன. இந்தச் சூழலில் பற்பல யோசனைகளும் ஆற்றல் களும் சங்கமிக்கின்ற இடமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ்ந்து வரவேண்டும் என்று நிதி அமைச் சர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். 
உலகம் எதிர்நோக்கக்கூடிய பல சவால்களைச் சமாளிக்க உதவும் எல்லா யோசனைகளும் ஆற்றல்களும் ஒரே ஒரு நாட் டிடம் அல்லது ஓர் அமைப்பிடமே இருந்துவிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
வேகமாக மாறி வருகின்ற, ஒன்றையொன்று அதிகம் பின்னிப் பிணைந்து வருகின்ற உலகில், திறந்த நிலையில் இருந்து ஒன்று சேர்ந்து பாடுபட்டு சிறந்த விளைவு களை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

‘தே கேம் ஃபிரம் ஜஃப்னா’ (They Came from Jaffna) நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், திருமதி ஹெங் இருவரும் நூலைப் பெற்றுக்கொண்டனர். நூலை எழுதிய திருமதி இந்திரா ஈஸ்வரன், (வலது) டாக்டர் லாவன் ஈஸ்வரன் சுப்பிரமணியம் (இடது) உடன் உள்ளனர். 
படம்: திருமதி இந்திரா ஈஸ்வரன். 
2019-03-24 06:10:00 +0800