வேலை, வாழ்க்கைச் சமநிலை தொடர்பிலான பயிலரங்குகளுக்கு அடுத்த மாதம் பெண்களுக்காக பெண்களே ஏற்பாடு செய்துள்ளனர். மக்கள் கழகத்தின் தலைமை யில் நடத்தப்படவுள்ள இப்பயிலரங் குகள் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்காகவும் இளம் பிள்ளைகளைக்கொண்ட தாய்மார் களுக்காகவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. பெண்களின் சுகாதாரம், குடும் பத்தினரின் ஆரோக்கியம், வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க் கைக்கும் இடையே சமநிலை காண்பது போன்ற பல கருப் பொருள்களின் அடிப்படையில் இப்பயிலரங்குகளை நடத்த திட்ட மிட்டுள்ளன. இதன் தொடர்பில் நேற்று நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின மாநாட்டில் சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் இதனை அறிவித்தார். மனைவி, தாய், மகள், ஊழியர், முதலாளி, பராமரிப்பாளர் போன்ற பல பணிகளுக்கிடையே பெண்கள் தொடர்ந்து பல சவால்களை எதிர் நோக்குவதாகவும் இதனால் தங் களின் சொந்த ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக் குவதில்லை என்றும் அவர் சுட் டினார். அதனால் இத்தகைய சவால் களை எதிர்கொண்டு சமாளிக்க இப்பயிலரங்குகள் தேவையான திறன்களை அளிப்பதுடன் புரிந் துணர்வையும் ஏற்படுத்தும் என் றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களுக்காக பெண்கள் நடத்தும் பயிலரங்குகள்
1 mins read
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

