இன்னொருவரின் கடன் அட்டையில் $2,400 ஈஸி-லிங்க் நிரப்பியவர் கைது

இன்னொருவரின் கடன் அட்டையைக் கொண்டு $2,400க்கும் மேற்பட்ட தொகையை ஈஸி-லிங்க் நிரப்புதலுக்காக பயன்படுத்திய 52 வயது ஆடவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
தொலைந்துபோன கடன் அட்டையில் பல அங்கீகரிக்கப்படாத ஈஸி-லிங்க் நிரப்புதல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண், பிப்ரவரி 22ஆம் தேதியன்று போலிசாரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வர்த்தக விவகாரங்கள் பிரிவின் அதிகாரிகள் ஆடவரை அடையாளம் கண்டு ஜூரோங் கேட்வே சாலையில் கைது செய்தனர். ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில் பெண்ணின் கடன் அட்டையைக் கண்டெடுத்த ஆடவர் அதைக் கொண்டு ஈஸி-லிங்க் நிரப்புதல்களைச் செய்ததாக ஆரம்பகட்ட விசாரணை தெரிவித்துள்ளது. ஆடவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரை சிறைத் தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!