சுடச் சுடச் செய்திகள்

கைபேசியில் பேசிக்கொண்டே சென்ற மாது மீது டாக்சி மோதியது

லாவண்டர் ஸ்திரீட்டில், கெம்பாஸ் ரோட்டுக்கு அருகில் கடந்த வெள் ளிக்கிழமை பிற்பகல் 3.12 மணிக்கு மாது ஒருவர் தனது கைபேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அவர் இடப் பக்கம் வரும் டாக்சியைக் கவனிக்க வில்லை.
அப்போது டாக்சி அவர் மீது மோதியது. நல்லவேளையாக அவ ருக்குக் காயம் ஏற்படவில்லை. இந் தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, பாத சாரிகள் சாலையைக் கடக்கும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண் டும் என்று இணையவாசிகள் கேட் டுக்கொண்டுள்ளனர். 
காரின் கேமராவில் பதிவான காட் சியில் அந்த மாது பாதசாரிகள் கடக் கும் இடத்தைப் பயன்படுத்தாமல், சாலையின் குறுக்கே கடந்து சென் றார் என்று தெரிந்தது.
மாதை மோதிய டாக்சி ஓட்டுநர், உடனே வாகனத்திலிருந்து இறங்கி, அந்த மாதைத் தூக்கிவிட்டு, சாலை யின் ஓரத்துக்கு அழைத்துச் சென் றார். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon