சாங்கி விமான நிலையம்; புதிய திட்டங்கள்

சாங்கி விமான நிலையத்தைச் சுற்றிலுமிருக்கும் இடத்தை உருமாற்றி, அங்கு விமானப் போக்குவரத்தை அதிகரிக்க நோக்கம் கொண்டிருக்கும் பல்வேறு பெருந்திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

விமானத்துறை தொடர்பான ஆய்வு, மேம்பாட்டுக் கூடம், சாங்கி விமான நிலையத்தில் இனி அமையவிருக்கும் ஐந்தாம் முனையத்தைச் சுற்றிலும் வேலையிடங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றை அமைப்பதற்கான யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுப்பயணத்திற்கும் உல்லாசத்திற்கும் பயன்படக்கூடிய நீர்முகப்பு வட்டாரத்தை அமைப்பது குறித்த யோசனையும் எழுந்துள்ளது. சாங்கி வட்டாரத்தில் வர்த்தக வட்டாரத்தைப் புதிதாக அமைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டு வருகிறது.

2019ஆம் ஆண்டுக்கான நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் வரைவு பெருந்திட்டத்தில் இந்தத் திட்டங்கள் அத்தனையும் இடம்பெறுகின்றன.

ஐந்தாம் முனையத்திற்கும் தானா மேரா துறைமுகத்திற்கும் இடையிலான இணைப்புகளின் மேம்பாடும் பெருந்திட்டத்தில் அங்கம் வகிப்பதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது. தற்போது சாங்கி விமான நிலையத்திற்கும் தானா மேரா துறைமுகத்திற்கும் இடையே பேருந்து சேவைகள் இயங்குகின்றன.

இனி வரும் ஆண்டுகளில் ஆசிய-பசிஃபிக் வட்டாரத்திற்குச் செல்லும் விமான பயணங்களுக்கான தேவை வலுவாகி வரும் என்பதால், இந்த வட்டாரத்திலுள்ள விமான நிலையங்கள் சுற்றுப்பயணிகளை ஈர்க்க பல்வேறு புத்தாக்கமிக்க உத்திகளைக் கையாள்கின்றன.

ஏப்ரல் 17ஆம் தேதி சாங்கி விமான நிலையம் ஜுவல் சாங்கியைத் திறந்தது. அழகிய இயற்கை அம்சங்கள், கவர்ச்சிமிக்கக் கடைகள், மேம்பட்ட விமான நிலைய வசதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஜுவல், சிங்கப்பூரின் மற்றொரு சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. இதனை அடுத்து சாங்கி விமான நிலையத்தின் மிகப்பெரிய மேம்பாடாக இருக்கப்போகும் ஐந்தாம் முனையம், 2030ஆம் ஆண்டில் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!