‘கோஜேக்’ ஓட்டுநருக்கு எச்சரிக்கை

பெண் பயணி ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 'கோஜேக்' தனியார் வாடகை வாகனச் சேவை நிறுவன ஓட்டுநருக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. தனியார் வாடகை வாகன ஓட்டுநர் கமாருஸமான் அப்துல் லதீஃப் அதிகாரமின்றித் தானும் தனது பயணியும் பேசிக்கொண்டதைக் காணொளி எடுத்து அதனை வெளியிட்டதற்காக அவர் எச்சரிக்கப்பட்டதாக ஆணையம் புதன்கிழமை கூறியது.

ஜனவரி 29ஆம் தேதி கமாருஸமானுக்கும் அந்தப் பெண் பயணிக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தைக் காட்டும் காணொளியை அவர் ஃபேஸ்புக்கில் இரண்டு நாட்கள் கழித்து வெளியிட்டார். பீஷான் வட்டாரத்திலிருந்து பயணியை கோல்மன் ஸ்திரீட்டுக்குக் கொண்டு செல்லும்போது வழியில் அவர்களுக்கு இடையே பயணப் பாதை குறித்த வாக்குவாதம் மூண்டது. இணையத்தில் அந்தக் காணொளி தீயெனப் பரவியதை அடுத்து, நிலப் போக்குவரத்து ஆணையம் பிப்ரவரி மாதம் கமாருஸமானுக்கு அழைப்பாணை விடுத்து அவரை விசாரித்தது.

"நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதலின்றி ஒளிப்பதிவுகளைச் செய்து அவற்றைக் காண அதிகாரமில்லாதவர்களிடம் வெளியிடுவதற்கு டாக்சி அல்லது தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு அனுமதி இல்லை என்பதை ஆணையம் இங்ஙணம் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறது," என்று ஆணையப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுவதை இந்த விதிமுறை உறுதி செய்வதாக அவர் சொன்னார்.

இது குறித்து 49 வயது கமாருஸமான் எதையும் கூற மறுத்துள்ளதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ்' தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!