செஞ்சிலுவைச்சங்க இணைய ஊடுருவல்; 4,300 பேர் தகவல்கசிவு 

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத் தின் இணையத்தளம் சென்ற புதன்கிழமை அன்று ஊடுருவப் பட்டதில் 4,000க்கும் மேற்பட் டோரின் தனிநபர் தகவல்கள் கசிந்திருப்பதாக நேற்று சங்கம் தெரிவித்தது. சிங்கப்பூரின் சுகா தார அமைப்புகளைப் பாதித்து வரும் தரவு மீறல் சம்பவங்களில் இது ஆகக் கடைசியானது. 

சங்கத்தின் இணையத்தளத் தின் ஒரு பகுதி ஊடுருவப்பட் டதில் 4,300 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரத்த நன்கொடை வழங்க விரும்புவோர் விவரங் களைத் திரட்டும் பகுதி அது எனச் சங்கம் கூறியது.

பொதுமக்கள் ரத்த நன் கொடை அளிக்க விரும்பும்போது இணையத்தளம் வழி தங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பர். 

அதைத் தொடர்ந்து விருப்பம் தெரிவித்தோரின் சார்பாக செஞ்சி லுவைச் சங்கம், வெவ்வேறு ரத்த வங்கிகளுடனும் நடமாடும் ரத்த நன்கொடை நிலையங்களுடனும் தொடர்புகொள்ளும். 

ரத்த நன்கொடையாளர்களைச் சந்தித்து முன்பதிவு ஏற்பாடு செய் திட  இவ்வாறு சங்கம் செயல்படும்.

ரத்த நன்கொடையாளர்கள் தங்களுக்கு ஏற்ற நாளையும் நேரத்தையும் குறிப்பிட்டிருப்பதன் அடிப்படையில் சங்கம் இந்த ஏற்பாடுகளைச் செய்யும்.

இதன் தொடர்பில் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்திருந்த 4,297 பேரின் தகவல்கள் ஊடுரு வப்பட்டன. 

அவர்களின் பெயர், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, ரத்த வகை, ரத்த நன்கொடை வழங் குவதற்கான விருப்ப தேதி, நேரம், இடம் போன்ற தகவல்கள் ஊடு ருவல் சம்பவத்தில் கசிந்தன.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon