பொதுப்போக்குவரத்தில் உடற்குறையுள்ளவர்கள்: கண்காட்சி

அனைவரையும் உள்ளடக்கிய பொதுப்போக்குவரத்தை விளம்பரப் படுத்தும் நோக்கில் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் செங்காங் பேருந்து நிலையத்தில் 10 நாட்களுக்கு கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. நான்காவது முறையாக நடைபெறும் வருடாந்திர நிகழ்ச்சியான ‘கேர்ஸ் கருணை மாதத்’தின் அங்கமாக இது அமைக்கப்பட்டுள்ளது. 

கிளவ்கோமா நோயினால் 2004ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட திரு லாரன்ஸ் டான் தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள் ளும் நோக்கில் அந்தக் கண்காட்சி யில் பங்கேற்றார். தற்போது அவரது இடது கண் பார்வை முற்றிலும் பறிபோன நிலையில் வலது கண்ணில் பார்வை 20% மட்டுமே உள்ளது.

 

பேருந்து ஓட்டுநர்கள் தமக்கு உதவிய அனுபவத்தை அவர் பார்வையாளர்களிடையே பகிர்ந்து கொண்டார்.

பேருந்து ஓட்டுநர்கள், பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் தங்கள் பாராட்டைத்  தெரிவிக்கும் விதமாக நன்றிக் குறிப்புகளை வழங்கி வந்தனர்.

நல்ல சேவை அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் எஸ்பிஎஸ் நிறுவனம் உடற்குறையுடையோர் சங்கத்துடன் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. 

சிங்கப்பூர் பார்வைக் குறை பாடுள்ளோர் சங்கம், சிறப்புத் தேவையுடையோருக்கான சங்கம், ‘கைட் டாக்ஸ் சிங்கப்பூர்’ போன்ற அமைப்புகள் இந்தக் கண்காட்சி யில் பங்கேற்று உடைகுறையுடை யோருக்கு  பொதுப்போக்குவரத்து இதமான அனுபவமாக இருப்பதை செய்முறையாக விளக்கினர். பாலர் பள்ளிகள், தொடக்கப்பள்ளி களைச் சேர்ந்த சுமார் 100 மாண வர்கள் நேற்று கண்காட்சியைப் பார்வையிட்டனர். 

பாலர் பள்ளி முதல் மேல்நிலைக் கல்வி நிலையங்கள் வரை பயிலும் சுமார் 1,300 மாணவர்கள் பேருந்து நிலையங்கள், எம்ஆர்டி நிலையங் களுக்கு இந்த மாதம் சென்று அங்கிருக்கும் ஊழியர்களுக்கு பாராட்டைத் தெரிவிக்க உள்ளனர்.