போதைப்பொருள் ஒழிப்புக்கு தொடரும் வலுவான ஆதரவு

போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் கொள்கைகளுக்கு ஒட்டுமொத்த பொதுமக்களின் ஆதரவு வலுவாக இருந்தாலும் போதைப்பொருட்கள், குறிப்பாக கஞ்சா, பற்றி இளையர்கள் தாராள மய கருத்துகளைக் கொண்டி ருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு உள்துறை அமைச்சு சிங்கப்பூரில் மேற் கொண்ட ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 13 முதல் 75 வயது வரையுள்ள 2,000 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் இருந்து இந்த முடிவு பெறப்பட்டுள் ளது. சிங்கப்பூரை போதைப்பொரு ளற்ற நாடாக வைத்திருப்பதற்குக் கடுமையான சட்டங்களைத் தொடர்ந்து நடைமுறையில் வைத் திருக்க வேண்டும் என ஆய்வில் பங்கேற்றவர்களில் 98 விழுக் காட்டினர் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூரை போதைப்பொரு ளற்ற நாடாக வைத்திருப்பதில் சட்டங்கள் நல்ல பலனளிப்பதாக 90 விழுக்காட்டினர் ஒப்புக்கொண் டனர். 8 விழுக்காட்டினர் நடுநிலை யாகக் கருத்துரைத்தனர்.

உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்காது என்ற எண் ணத்தில் கஞ்சாவைப் பயன்படுத் தலாம் என ஆய்வில் பங்கேற்ற 13 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் குறிப்பிட்டனர். 

இளையர்களில் 68 விழுக்காட் டினர் கஞ்சா பயன்பாடு உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று கூறினர். ஆனால், ஆய்வில் பங்கேற்ற 30 வயதுக்கு மேற்பட்ட வர்களில் 84 விழுக்காட்டினர் அது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்