$35 மில்லியன் மோசடி செய்த பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறை

லியோங் லாய் யீ, 55, எனும் இல்லத்தரசி 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தில் ‘பொன்ஸி’ எனும் திட்டத்தைச் செயல்படுத்தி அதன் மூலம் 53 பேரிடமிருந்து $35 மில்லியனை மோசடி செய்ததற்காக அந்தப் பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் கொடுத்த பணத்தில் லியோங், கடன் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் சொத்துகளைக் குறைந்த விலையில் வாங்கி லாபத்துடன் விற்பனை செய்வார் என்று ஏமாற்றப்பட்டவர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் லியோங் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. முதலீடு செய்யும் பணத்துக்கு 7  முதல் 9% வரை லாபம் அளிக்கும் முதலீட்டுத் திட் டத்தையும் குறிப்பிட்டு சிலரிடம் மோசடி செய்தார் லியோங். தங்க நகைகளை அடமானம் வைத்து, மத்திய சேமநிதியிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து தன்னிடம் முதலீடு செய்யுமாறு சிலரை அவர் சம்மதிக்கவைத்தார். 

அண்மையில் இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் செலுத்திய பணத்தை முன்னதாகப் பணம் செலுத்தியவர்களுக்கு லியோங் கொடுத்து சமாளித்ததுடன் தனது சொந்த செலவுகளுக்கும் அந்தப் பணத்தை அவர் பயன்படுத்தியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கென்னத் சின் கூறினார். 

முதலீட்டாளர்களுக்குப் பணத் தைத் திருப்பித் தருவதைத் தாமதப்படுத்தியதுடன் தான் உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடும் என்று முதலீட்டாளர்களுக்கு லியோங் கடிதம் அனுப்பி யதாகக் கூறப்பட்டது. 

லியோங் 50 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து 806 வேறு குற்றச்சாட்டுகளும் தண்டனைவிதிப்பின்போது கவனத் தில் கொள்ளப்பட்டன. 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்