‘ஆழமான வட்டார பொருளியல் ஒருங்கிணைப்பு தேவை’ 

ஆசிய பசிபிக் வட்டார நாடுகள் இன்னும் ஆழமான பொருளியல் ஒருங்கிணைப்பு ஏற்பட கூடுதலா கப் பங்காற்ற வேண்டும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிலியின் சான்டியாகோ நகரில் நடைபெறும் ஏபெக் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் உரை யாற்றிய திரு சான், “வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பு மேம் பட்டால், அடுத்த தலைமுறைக்

கான மின்னிலக்க பொருளியல் உட்பட வர்த்தகம், முதலீட்டு விவ காரங்கள் தொடர்பில் பேச்சு வார்த் தைகள் நடத்தலாம்,” என்றும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரி வித்தார்.

“சிலி தலைமையேற்று நேற் றோடு முடிவடைந்த ஏபெக் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற 21 நாட்டு அமைச்சர் களுடன் பயன்மிக்க பேச்சு வார்த் தைகள் நடைபெற்றன,” என்றும் திரு சான் சொன்னார்.

ஆசிய பசிபிக் மாதிரி மின்னி யல் துறைமுகக் கட்டமைப்பில் (ஏப்மென்) சேர்ந்துகொள்ள ‘பிஎஸ்ஏ இன்டர்நேஷனல்’ நிறுவ னத்தை சிங்கப்பூர் நியமித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந் தார்.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் தொடரிணைப்பையும், மின்னணு வியல் கட்டமைப்புகளையும் மேம் படுத்துவதிலும் ‘ஏப்மென்’ கட்ட மைப்பு உதவுகிறது. 

அதன் மூலம் வர்த்தக வசதி களும் விநியோகமும் அதிகரிக்கப் படும் என்று வர்த்தக தொழில் அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

‘ஏப்மென்’ கட்டமைப்பில் சேரு வதன்மூலம் சிங்கப்பூர் அந்த அமைப்பில் உள்ள 12 ஏபெக் பொருளியல்களில் உள்ள மற்ற 21 உறுப்பினர்களுடன் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ளும் என்றும் திரு சான் விவரித்தார்.

வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் தவிர அமைச்சர் சான், சிலி ஏற் பாட்டில் நடைபெற்ற பசிபிக் நாடு களுக்கான விரிவான மற்றும் முற் போக்கான பங்காளித்துவ உடன் பாடு தொடர்பான செய்தியாளர் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

அதில் இந்த உடன்பாட்டின் உத்திபூர்வ மற்றும் பொருளியல் முக்கியத்துவத்தையும் திரு சான் எடுத்துரைத்தார் என்றும் அமைச் சின் அறிக்கை தெரிவித்தது.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்