சுடச் சுடச் செய்திகள்

தவறான தடத்தில் சென்ற பிஎம்டபிள்யூ கார் பாதசாரி பாதையை வெட்டி ஓட்டம்

தவறான தடத்தில் ஓட்டிக்கொண்டிருந்த SLA9011L உரிம எண் கொண்ட பிஎம்டபிள்யூ காரின் ஓட்டுநர், தன் தவற்றைச் சமாளிக்க பாதசாரி பாதையில் சட்டவிரோதமாக ஓட்டிச்சென்றார்.

சிங் லியோங் என்ற ஃபேஸ்புக் பயனாளர் இந்தச் சம்பவத்தின் காணொளி ஒன்றை கடந்த சனிக்கிழமை மதியம் (இம்மாதம் 1ஆம் தேதி) பதிவு செய்தார்.

சென்ட்ரல் பொலிவார்டை நெருங்கும் கிராஸ் ஸ்திரிட் பகுதியில் அந்த ஒரு நிமிடக் காணொளி எடுக்கப்பட்டது.   

அந்த ஓட்டுநர் இடக்கோடி தடத்தில் பயணம் செய்வதைக் காணொளி காட்டியது. ஆனால், அந்தத் தடம் இடதுபக்கம் திரும்புவதற்கானது.

நேராகச் செல்லத் திட்டமிட்ட அந்த ஓட்டுநர், சாலை நடுவிலிருந்த பாதசாரி பாதையில் காரை ஏற்றி வெட்டிச்சென்றார்.

செய்தி: ஸ்டோம்ப்

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon