தாய்லாந்துக்குச் சென்ற சிங்கப்பூர் மாணவர்களுக்கு சிக்குன்குன்யா

தாய்லாந்தின் ரட்ச்சபுரி மாவட்டத்திற்குச் சேவைக் கல்வி பயணம் சென்றிருந்த சிங்கப்பூர் கலைப் பள்ளியின் 13 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிகிறது. கொசுக்கள் கடித்ததால் அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.

மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபிறகு, பாதிக்கப்பட்டோரில் சிலர் பேங்காக் கிறிஸ்துவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு சிக்குன்குன்யா காய்ச்சல் இருப்பது இம்மருத்துவமனையில் கண்டறியப்பட்டதாகப் பள்ளி தெரிவித்தது.

சமூக சேவை திட்டப்பணிக்காக ரட்ச்சபுரியில் உள்ள கிராமத்திற்குச் சென்றிருந்த 25 மாணவர்களில் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்குவர். நான்காம் ஆண்டு பயிலும் இம்மாணவர்கள் 15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஞாயிறு (ஜூன் 2) இரவு நிலவரப்படி ஆறு மாணவர்கள் பேங்காக் மருத்துவமனையில் இருந்ததாகக் கலைப் பள்ளியின் பேச்சாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 13 மாணவர்களில் ஐவர் குணமடைந்து, சனிக்கிழமை (ஜூன் 1) சிங்கப்பூருக்குத் திரும்பிவிட்டனர். பாதிக்கப்படாத 12 மாணவர்களும் சனிக்கிழமை நாடு திரும்பினர். காய்ச்சலிலிருந்து குணமடைந்த மேலும் இரு மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூருக்குத் திரும்பி வந்தார்கள்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon