சுடச் சுடச் செய்திகள்

நல்லிணக்கம்: முஸ்லிம்கள் தொடர்ந்து உதவவேண்டும்

சிங்கப்பூரில் பல இன, மொழி, சமய மக்களுடன் நல்லுறவை முஸ்லிம் சமூகம் தொடர்ந்து பலப் படுத்த வேண்டும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி வலி யுறுத்திக் கூறினார். 

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் பெருமக்கள் நோன்புப் பெருநாளை நேற்று சிறப்பாகக் கொண்டாடினர். சுல்தான் பள்ளி வாசலில் நடந்த சிறப்புத் தொழுகை யில் கலந்துகொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். 

“சிங்கப்பூரில் பல்லாண்டு கால மாக பலப்படுத்தப்பட்டு வந்துள்ள பல சமய சமூகத்தில் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். சமய நல்லிணக் கத்தை கட்டிக்காக்க வேண்டிய தேவை இருக்கிறது,” என்று திரு ஸுல்கிஃப்லி கூறினார். 

“நெருக்கடி காலத்தில், பயங்கர வாத நேரத்தில் இந்த நல்லுறவுக் குச் சோதனை ஏற்படும். அமைதி காலத்தில் உறவு வலுவாக இருக் கையில் நெருக்கடி நேரத்தில் அந்த நல்லுறவு இன்னும் பலமாக இருக்கும் என்பது நிச்சயம்,” என் றார் அமைச்சர். அந்தத் தொழுகை யில் அதிபர் ஹலிமா யாக்கோப், அவருடைய கணவர் உட்பட 5,000 பேர் கலந்துகொண்டனர். 

அவர்களிடத்தில் சமய உரை யாற்றிய முஃப்தி ஃபட்ரிஸ் பக்கராம்,  பல சமய சமூகத்தை ஆதரித்து பாதுகாக்கும்படி வலி யுறுத்தினார். முஃப்தியின் சமய உரையை இதர அனைத்து பள்ளி வாசல்களிலும் இமாம்கள் வாசித் தனர். 

முஃப்தி ஆற்றிய சமய உரைப் பற்றி கருத்துரைத்த அமைச்சர், நோன்பு, கருணை உணர்வை ஊக்குவிக்கிறது என்று தெரிவித் தார். இந்தக் கருணை உணர்வு அறப்பணியாக மாறி, உலகம் முழுவதும் ஒவ்வொருவரிடத் திலும் உருவாக வழிபிறக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் உள்ள 70 பள்ளி வாசல்களிலும் நேற்று சிறப்புத் தொழுகைகள் நடந்தன. 

நோன்பு மாதம் உடல் நலனுக்கு ஏற்ற ஒரு கலாசாரத்தைப் பேணி உருவாக்கித் தருவதாகவும் முஃப்தி தமது உரையில் குறிப் பிட்டார். 

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon