பாலியல் குற்றங்கள்: பரிந்துரையை ஏற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் 

பாலியல் ரீதியான தவறான நடத்தை குறித்த பரிசீலனைக் குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. 
கடுமையான குற்றங்களுக்கு குறைந்தது ஓராண்டு இடைநீக்கம், மேலும் பாதிப்புண்டாக்கிய குற்றங்களுக்கு உடனடி நீக்கம் போன்ற அதிகரிக்கப்பட்ட தண்டனைகளும் அந்தப் பரிந்துரைகளும் அவற்றில் அடங்கும். 
பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு முறை கட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்வதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டது. அண்மையில் பல்கலைக்கழக குளியலறையில் மாணவி ஒருவர் குளிப்பதை படம் எடுத்த மாணவருக்குத் தக்க தண்டனை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை என்யுஎஸ் மாணவி மோனிக்கா பே சில மாதங்களுக்கு முன்பாக சமூக ஊடகம் மூலம் முன்வைத்தார். 

தேசிய பல்கலைக்கழகம். கோப்புப்படம்.
தேசிய பல்கலைக்கழகம். கோப்புப்படம்.

குற்றவாளிகளுக்கு தண்டனை, ஒழுங்கு முறை நடவடிக்கைகளின்போது பாதிக்கப்பட்டோரின் ஈடுபாடு, பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவை அதிகரிக்க முயற்சிகள் என்பன அந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.
குற்றம் செய்தவரும் பாதிக்கப்பட்டோரும் மீண்டும் சந்திக்காமல் இருக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்