தீப்பற்றி எரிந்த மெர்சிடிஸ் கார்

வியாழன் இரவு 10.20 மணியளவில் சின் மிங் அவென்யூ புளோக் 404 அருகே நிறுத்தப்பட்டிருந்த சில்வர் நிற மெர்சிடிஸ் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை அணைத்தனர். தீ மூண்டதற்கான காரணம் தெரியவில்லை. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்