கடைகளில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் விலை குறைகிறது

தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கான புதிய தீப் பாதுகாப்பு தரநிலைகள் நடப்புக்கு வர இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கையில், அச்சாதனங்களை விற்கும் கடைகள் இந்தத் தரநிலைகளுக்கு உட்படாத, ஏற்கெனவே இருப்பில் உள்ள சாதனங்களைக் குறைந்த விலைக்கு விற்க முற்படுகின்றன. அடுத்த மாதத்திலிருந்து UL2272 பாதுகாப்பு தரநிலைக்கு உட்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களை மட்டும் விற்பனையாளர்கள் விற்க முடியும்.

இச்சாதனங்களை விற்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘மோபோட்’டின் பொது மேலாளர் சியுவ் பூன் ஹர், ஏற்கெனவே $500க்கு மேல் விற்பனையான தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் இப்போது $300க்கு விற்கப்படுவதாகத் தெரிவித்தார். புதிய பாதுகாப்பு தரநிலைக்கு உட்படாத சாதனங்களை வைத்திருப்போர், அடுத்த ஆண்டு இறுதிவரை அவற்றைப் பயன்படுத்த முடியும். இந்தத் தரநிலைக்கு உட்படாத சாதனங்களை 2021ஆம் ஆண்டிலிருந்து பொது இடங்களில் ஓட்டுவது சட்டவிரோதமாகும்.

இந்த மாத இறுதிக்குள், மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் அவர்களின் சாதனங்களைப் பதிவுசெய்ய வேண்டும். OneMotoring இணையத்தளத்தில் அல்லது அனைத்து சிங்போஸ்ட் அலுவலகங்களில் $20 கட்டணம் செலுத்தி மின்ஸ்கூட்டர்களைப் பதிவு செய்துகொள்ளலாம். அடுத்த மாதத்திலிருந்து UL2272 பாதுகாப்பு தரநிலைக்கு உட்படாத சாதனங்களின் பதிவு ஏற்றுக்கொள்ளப்படாது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

கடைகளில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் விலை குறைகிறது தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கான புதிய தீப் பாதுகாப்பு தரநிலைகள் நடப்புக்கு வர இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கையில், அச்சாதனங்களை விற்கும் கடைகள் இந்தத் தரநிலைகளுக்கு உட்படாத, ஏற்கெனவே இருப்பில் உள்ள சாதனங்களைக் குறைந்த விலைக்கு விற்க முற்படுகின்றன.

அடுத்த மாதத்திலிருந்து UL2272 பாதுகாப்பு தரநிலைக்கு உட்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களை மட்டும் விற்பனையாளர்கள் விற்க முடியும். இச்சாதனங்களை விற்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘மோபோட்’டின் பொது மேலாளர் சியுவ் பூன் ஹர், ஏற்கெனவே $500க்கு மேல் விற்பனையான தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் இப்போது $300க்கு விற்கப்படுவதாகத் தெரிவித்தார்.

புதிய பாதுகாப்பு தரநிலைக்கு உட்படாத சாதனங்களை வைத்திருப்போர், அடுத்த ஆண்டு இறுதிவரை அவற்றைப் பயன்படுத்த முடியும். இந்தத் தரநிலைக்கு உட்படாத சாதனங்களை 2021ஆம் ஆண்டிலிருந்து பொது இடங்களில் ஓட்டுவது சட்டவிரோதமாகும்.

இந்த மாத இறுதிக்குள், மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் அவர்களின் சாதனங்களைப் பதிவுசெய்ய வேண்டும். OneMotoring இணையத்தளத்தில் அல்லது அனைத்து சிங்போஸ்ட் அலுவலகங்களில் $20 கட்டணம் செலுத்தி மின்ஸ்கூட்டர்களைப் பதிவு செய்துகொள்ளலாம். அடுத்த மாதத்திலிருந்து UL2272 பாதுகாப்பு தரநிலைக்கு உட்படாத சாதனங்களின் பதிவு ஏற்றுக்கொள்ளப்படாது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!