அமைச்சர் ஈஸ்வரன்: நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் ஒப்பந்தம்

இந்து சமய அறநிறுவனங்கள் முறையாகத் தமது வளங்களைப் பயன்படுத்தவும் பங்காளி அமைப்பு களிடையே நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் நேற்று இந்து அறக்கட்டளை வாரி யத்தின் தலைவரும் அறநிறுவன ஆணையரும் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்ட னர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், “மக்க ளிடம் தொடர்புகொள்வது, ஆலோ சனை வழங்குவது, சமுதாயத்தை உயர்த்துவது ஆகியவற்றில் இந் துக் கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுவே ஒரு கடின மான பணி.

“ஆனால் எதிர்பார்ப்புகளும் தேவைகளும் அதிகரித்து வரும் காலகட்டத்தில் அனைவரும் இப்பணியைச் செய்கின்றனர். இக் காலத்தில் மக்கள் நன்கு படித்தவர் களாகவும் மேம்பட்ட வெளியுலகத் தொடர்பைப் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். ஆகையால், சேவைகள் ஒரு குறிப்பிட்ட தரத் தில் இருக்குமாறு அவர்கள் எதிர் பார்க்கலாம்,” என்றார் அமைச்சர் ஈஸ்வரன்.

அறநிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுவாகவே நிறுவனங்கள், சிங்கப்பூரின் வளர்ச்சி தொடர்பில் எதிர்பார்ப்புகளும் தேவைகளும் அதிகரித்து வருகின்றன என்றும் அதிகரித்து வரும் தர எதிர்பார்ப்பு கள், நிறுவனங்கள் முறையாக, தொடர்ச்சியாக நடத்தப்பட முக்கிய காரணமாகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம், ‘‌ஷேர்டு சர்வீசஸ் ஸ்கீம்’ எனப்படும் சேவைகளைப் பகிரும் திட்டம்.

குறைந்த வளங்கள் கொண்ட சிறிய அறநிறுவனங்கள் வளங் களைச் சிறந்த முறையில் பயன் படுத்த இந்தத் திட்டம் வழி வகுக் கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்து அறநிறுவனங்களுக்கு அதிக பயிற்சிகள் அளிக்கப்படும். அத்துடன், இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆலோசனைகளை எளிதான முறையில் நாடுவதற்கான ‘வாக்-இன் கிளினிக்’ எனப்படும் ஆலோசனை நிலையங்களும் அமைக்கப்படும்.

மேலும், இந்து அறநிறுவனங் களின் விழிப்புணர்வை அதிகரிக் கும் நோக்கத்தில் ஆலோசகர் பட்டியல் ஒன்றும் நிதி ஆதரவு பெறும் வழிகளுக்கான தகவல் களும் வழங்கப்படும்.

பிஜிபி அரங்கில் நடைபெற்ற இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ் வில் முக்கிய பிரமுகர்கள், தொண் டூழியர்கள், சிங்கப்பூர் இந்துக் கோயில்களின் தலைவர்கள் எனக் கிட்டத்தட்ட 50 பேர் கலந்து கொண்டனர்.

“நிதி திரட்டுவதன் தேவை குறிப்பிடத்தக்க ஒரு சவால். நிர்வாகக் குழு உறுப்பினர்களாக நல்ல நோக்கத்தில் சரியான தீர்மா னங்களை நாம் எடுத்தாலும், பிரச் சினைகளைத் தவிர்க்க நம் செயல் முறைகளை, முறையாகவும் வெளிப்படையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

“சிங்கப்பூரில் நம் கைகளைப் பிடித்து வழிகாட்ட அமைப்புகள் இருக்கின்றன என்பதற்கு நாம் நன்றியுடன் இருக்கவேண்டும்,” என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர். ஜெயச்சந்திரன்.

“அறநிறுவனங்களின் உற்பத் தித்திறனை அதிகரிப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்றும் இந்த ஒப்பந்தம் மூலம் நிர்வாகம் சம்பந்தமான வேலைகளை ‘‌ஷேர்டு சர்வீசஸ் ஸ்கீம்’ மூலம் சுலபமாக்கி, பயனுள்ள மற்ற பல சேவைகளை பயனாளர்களுக்கு வழங்க அற நிறுவனங்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தலாம்,” என்று தெரிவித்தார் அறநிறுவன ஆணையர் டாக்டர் ஆங் ஹக் செங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!