பொதுத்துறை அமைப்புகளில் நடைமுறைக் குறைபாடுகள்

பல்வேறு அமைச்சுகளிலும் அரசாங்க அமைப்புகளிலும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளில் பலவீனம், கொள்முதல், ஒப்பந்த நிர்வாகம் போன்றவற்றில் நிதிக் குறைபாடுகள் தென்பட்டிருப்பதாக அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் (ஏஜிஓ) ஆகக் கடைசி வருடாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.

2018/2019 நிதியாண்டுக்கான அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் தணிக்கைக்குப் பின் நடைமுறைக் குறைபாடுகள் பற்றிய அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில் 16 அமைச்சுகள், எட்டு அரசாங்க அங்கங்கள், ஒன்பது அரசாங்க ஆணை பெற்ற கழகங்கள், நான்கு அரசாங்க நிதி அமைப்புகள், அரசாங்கத்துக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்கள், மூன்று இதர கணக்குகள் ஆகியவற்றின் நிதி அறிக்கைகளை அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் தணிக்கை அறிக்கை ஆராயும்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, நகர மறுசீரமைப்பு ஆணையம், தற்காப்பு அமைச்சு, மனிதவள அமைச்சு ஆகியவற்றில் நடைமுறைக் குறைபாடுகள் தென்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய கலைக்கூடத்தின் மேம்பாட்டுத் திட்டத்துக்காக $12.4 மில்லியன் மதிப்புள்ள 142 குத்தகைகளுக்கு ஒப்புதல் பெறுவதில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்தன என்று அறிக்கை கூறுகிறது.

"இத்திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அமைச்சு, தேசிய கலைக்கூடத்திடம் ஒப்படைத்திருந்தாலும். பொது நிதி ஆக்கபூர்வமா

கப் பயன்படுத்தப்படுவதை அமைச்சு உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது.

அதற்குப் பதிலளித்த தேசிய கலைக்கூடம், தனது கொள்முதல் மற்றும் நடைமுறை கொள்கைகளை அது தற்போது ஆராய்ந்து வருகிறது என்றும் இம்மாத இறுதிக்குள் அதை முடித்துவிடும் என்றும் கூறியது.

கொள்முதல் செய்வதிலும் ஒப்பந்தங்களை நிர்வகிப்பதிலும் முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், தேசிய சமூக சேவைகள் மன்றம் ஆகியவையும் குறை கூறப்பட்டன.

முயிசை எடுத்துக்கொண்டால், ஹஜ் புனித யாத்திரையின் கட்டணம், தகவல்தொழில்நுட்ப உரிமை ஆகியவையும் சரிவர நிர்வகிக்கப்படவில்லை என்று அறிக்கை தெரிவித்தது.

அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கைக்குப் பதிலளித்த முயிஸ், தனது குறைபாடுகளை ஒப்புக்கொண்டது. இருப்பினும் அதில் மோசடி ஏதும் நடந்ததற்கான ஆதா ரம் இல்லை என்று மன்றம் தெரிவித்தது.

மனிதத் தவறும், செயல்முறைக் கோளாறுகளுமே கொள்முதல் குறைபாடுகளுக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்றும் முயிஸ் குறிப்பிட்டது.

அறிக்கையில் கூறப்படும் குறை பாடுகளுக்குத் தீர்வு காணும் வகையில் முயிசின் தலைமை நிர்வாகி தலைமையில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் முயிஸ் விளக்கமளித்தது. அரசாங்க ஆணை பெற்ற கழகமான சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் கீழ் செயல்படுகிறது.

மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் சுங்கத்துறை, தற்காப்பு அமைச்சு ஆகியவற்றில் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டில் பலவீனம் தென்பட்டுள்ளது என்றும் 'ஏஜிஓ' அலுவலகம் கூறியது.

சுகாதார அமைச்சு, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றின் மானிய விண்ணப்பம், மதிப்பீடு, ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றைக் கையாளும் நடைமுறைகள் போதவில்லை என்றும் 'ஏஜிஓ' அறிக்கை கூறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!