இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையே முதன்முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்தானது.

இந்திய சமுதாயத்திற்கு இணைந்து ஒருமித்த குரலாக உதவிக்கரம் நீட்டவேண்டும் எனும் நோக்கிலான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

காலத்திற்கேற்ப மாறிவருகின்ற இந்திய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய புதிய திட்டங்களில் இணைந்து செயல்படும் முயற்சியில் இவ்விரண்டு அமைப்புகளும் இறங்கியுள்ளன.

கலாசார, மரபுடைமை நடவடிக்கைகளை லிட்டில் இந்தியாவில் நடத்தி வருகின்ற லிஷாவின் நிகழ்ச்சிகளுக்கு சிண்டா ஆதரவளிப்பது போல் பரந்த சமுகத்தைச் சென்றடைவதற்கும் லிஷா சிண்டாவிற்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளது. இவ்விரண்டு அமைப்புகளும் சேர்ந்து பல நடவடிக்கைகளை கூட்டாக நடத்தி வந்தாலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சமுதாயத்திற்கு தேவைப்படுவதை சிறப்பான திட்டங்களின் வழியாகப் பூர்த்திசெய்ய வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அமைப்புகளுக்கு வெவ்வேறு திட்டங்கள் இருந்தாலும் மொழி, சமுதாய மேம்பாடு, கலை சார்ந்த விஷயங்களில் இவை சேர்ந்து பயணிக்கலாம் என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

"லிஷா அவர்களுடைய வர்த்தக சங்கங்களுடன் சேர்ந்து உதவி தேவைப்படும் இந்தியர்களுக்கு சிண்டாவின் மூலம் உதவிக்கரம் நீட்டலாம். லிஷா கலை, கலாசார, மொழி சார்ந்த பல நடவடிக்கைகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் சிண்டாவின் மூலம் பயனடைந்து வருவோர் கலந்துகொள்ளலாம்,’"என்று திரு அன்பரசு குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயத்தின் தேவைகளை அறிந்துகொண்டு புதிய திட்டங்களை வழிவகுத்து அவற்றைப் பூர்த்திசெய்ய இந்த ஒப்பந்தம் ஓர் ஆரம்ப தளம் எனக் கருதப்படுகிறது.

கேம்பல் லேன் சாலையில் இந்தியப் பாரம்பரிய உணவு விழா

அறுசுவை மணம் கேம்பல் லேன் எங்கும் வீச நேற்று இந்திய உணவு விழா தொடக்கம் கண்டது. 1960களில் கேம்பல் லேன் சாலையில் ருசிமிக்க பல்வேறு இந்திய உணவு வகைகள் வண்டிகளில் வரிசையாக விற்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் தொடங்கப்பட்ட இந்த உணவு விழா இம்மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சியின் மற்றொரு அங்கமாக லிட்டில் இந்தியா மரபுடைமை உணவகங்களின் வழிகாட்டிக் கையேடு புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரதமர் அலுவலக அமைச்சர் குமாரி இந்திராணி ராஜாகலந்துகொண்டார்.

அத்துடன், 'மகாராஜா சமையல் சவால்' போட்டியும் அங்கு நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவின் ‘மாஸ்டர் செஃப்’ போட்டியின் வெற்றியாளர் சசிக்குமார் செல்லையாவும் இரண்டு உள்ளூர் சமையல் வல்லுநர்களான ஆல்பர்ட் ராயன், வில்லியம் ஆங் ஆகியோரும் போட்டியின் நடுவர்களாகக் கலந்துகொண்டனர். 'மகாராஜா சமையல் சவால்' போட்டியின் வெற்றியாளருக்கான பரிசை குமாரி இந்திராணி ராஜா வழங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!