சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் பாலமாக அமைந்த ‘இந்தியா 101’ கருத்தரங்கு

சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையே பொருளியல் உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் நேற்று நடந்த ‘இந்தியா 101’ எனும் அனைத்துலகமயமாதல் கருத்தரங்கில் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையும் இந்தியாவின் வர்த்தக, தொழிற்சபை சம்மேளனமும் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டின.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனங்கள், குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் புரிய கைகொடுக்கும் என்றார் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் தலைவர் டாக்டர் டி. சந்துரு.

“சிறிய, நடுத்தர நிறுவனங் களுக்கு இந்தியாவில் வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக உள்ளது. புது இடத்திற்குச் செல்லும்போது, சுற்றுப்பயணியாகச் சென்றால்கூட, ஓரளவிற்கு தொடர்புகள் இல்லாமல் செல்வது கடினம். இந்தியாவில் 26 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபட்ட அணுகுமுறைகள் உள்ளன,” என்றார் டாக்டர் சந்துரு.

இந்தியாவில் தொழில் செய்ய தேவையான தொடர்புகள், வியாபார வாய்ப்புகள், நிறுவனத்தைப் பதிவு செய்யும் முறைகள், மூலதனத் தேவை, எந்தத் துறையில் வர்த்தகம் செய்யலாம், போன்றவற்றை அறிந்துகொள்ளும் தளமாக ‘இந்தியா 101’ கருத்தரங்கு அமைந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

வாழ்நாள் கற்றல் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வெளியுறவு, வர்த்தக, தொழில் அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் டான் வு மெங் கலந்து கொண்டார்.

2025ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகிலேயே மூன்றாவது ஆகப் பெரிய பயனீட்டுச் சந்தையாக உருமாறும் என்றும் வரும் ஆண்டுகளில் இந்தியா ஆக வேகமான வளர்ச்சி காணும் பெரிய பொருளியல் நாடாக விளங்கும் என்றும் கூறினார் டாக்டர் டான்.

“நிச்சயமற்ற உலக பொருளியல் சூழ்நிலையை நாம் தற்போது எதிர்நோக்குகிறோம். புதிய வாய்ப்புகளைத் தேடி சிங்கப்பூர் தொழில்கள் வெளிநாடுகளுக்குத் துணிவுடன் செல்வது இன்னும் அவசியமாகிறது. சிங்கப்பூருக்கு அதிக நம்பிக்கையளிக்கும் சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது,” என்று வலியுறுத்தினார் அவர்.

இந்தியப் பிரதமரின் பொருளியல் ஆலோசனை மன்றத்தின் செய லாளர் திரு ரட்டன் பி. வட்டல் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

“2018ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆக அதிக முதலீடு செய்த நாடு சிங்கப்பூர். 2018-19 நிதி ஆண்டில் இந்தியாவிற்குக் கிடைத்த ஆக அதிக அந்நிய நேரடி முதலீட்டை சிங்கப்பூர் வழங்கியது,” என்றார் திரு ரட்டன்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையே வலுவான பங்காளித்துவ உறவு உள்ளது என்றும் தற்காப்பு உற்பத்தி, உயிரியல் தொழில்நுட்பம், வங்கித்துறை மற்றும் நிதி, எரிசக்தி, விமானத்துறை, உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு மேம்படலாம் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார் அவர்.

“நுண்ணிய, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் துறையில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும். இந்தியா பல வாய்ப்புகளை வழங்கு கிறது என்று அனைவரும் அறி வோம்.

“அந்த வாய்ப்புகளைச் செயற்பாட்டுக்கு மாற்றியமைப்பதும் பிளவுகளை சீர் செய்வதும் நோக்கமாக கொள்ள வேண்டும்,” என்றார் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு ஜாவத் அஷ்ரஃப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!