தலையில் விழுந்த போத்தலால் உயிரிழந்த முதியவர்; ஆஸ்திரேலியர் மீது குற்றச்சாட்டு

மேல் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கண்ணாடி போத்தலால் தலையில் அடிபட்டு உயிரிழந்த 74 வயது முதியவரின் வழக்கில் ஆஸ்திரேலிய ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூ கோஸ்லிங் எனும் அந்த ஆடவர் மீது முன்யோசனையின்றி செயல்பட்டு ஒருவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.


ஆகஸ்ட் 18ஆத் தேதி அன்று திரு நசியாரி சுனி, தஞ்சோங் பகார் வட்டாரத்திலுள்ள ‘ஸ்போட்டிஸ்வுட் 18’ என்ற 35 மாடி கூட்டுரிமை வீட்டில் நடந்த புதுமனை புகுவிழாவுக்காகச் சென்றபோது இந்தச் சம்பவம் ஏற்பட்டது. வெளிப்புறத்து மேசைக்கருகே அமர்ந்து சாப்பிடவிருந்த திரு நசியாரி மீது கண்ணாடி போத்தல் திடீரென விழுந்ததாக அவரது இரண்டு மூத்த பிள்ளைகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அவரது இறுதிச் சடங்கின்போது தெரிவித்தனர்.


சம்பவ இடத்தில் அவரது மனைவியும் உறவினர்களும் அருகில் இருந்ததாகக் கூறப்படுகிறது. திரு நசியாரி உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மறுநாள் காலையில் அவர் உயிர் இழந்தார். இம்மாதம் 20ஆம் தேதி திரு நசியாரியின் நல்லுடன் அடக்கம் செய்யப்பட்டது.


இச்சம்பவத்தைத் தொடர்ந்து ‘ஸ்போட்டிஸ்வுட் 18’ குடியிருப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேல் மாடியிலிருந்து திரு நசியாரியின் தலையில் விழுந்தது ஒர் இத்தாலிய வைன் போத்தல்.

உயர் மாடியிலிருந்து குப்பை கொட்டியதற்காகக் கடந்த ஆண்டு 1,200க்கும் மேற்பட்டவர்கள் மீது தேசிய சுற்றுப்புற ஆணையம் நடவடிக்கை எடுத்தது. மாடியிலிருந்து அடிக்கடி குப்பைகள் வீசப்படும் 1,000க்கும் அதிகமான இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டன.

திரு ஆண்ட்ரூ மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகளை வரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!