கல்விக்கு உதவி நிதி துணை

தற்காப்புக்கு அடுத்து சிங்கப்பூர் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் ஆக அதிக நிதி ஒதுக்கப்படும் அமைச்சுகளில் கல்வி அமைச்சே முக்கிய இடம்பெறுகிறது. அரசு எடுக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் இருக்க, மாணவர்களுக்கு, குறிப்பாக வசதி குறைந்த மாணவர்களுக்கு ஆதரவு வழங்க நன்கொடையாளர்கள் முன்வரவேண்டும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் வலியுறுத்தினார்.

பிஜிபி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியத்தின் கல்வி உதவி நிதி விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஓங் பேசினார்.

“ஒரு குழந்தை வளர்ச்சி அடைய ஓரே வழி கல்வி என்று கூறியுள்ளார் திரு சிவதாஸ். இதே கண்ணோட்டத்தை அரசாங்கமும் கொண்டுள்ளது. குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பங்கள், ஒட்டுமொத்த சமுதாயமாகவும் தேசமாகவும் வளர்ச்சி அடைய கல்வி, திறன்களைக் கற்று அதைப் பயன்படுத்துவது அவசியம்,” என்றார் அவர்.

தகுதி அடிப்படையில் அமைந்துள்ள சிங்கப்பூர் கல்வித் திட்டத்தால் அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் முன்னேறும் என்றும் இதற்கென முதலீடு செய்வதிலிருந்து அரசாங்கம் சமரசம் செய்து கொள்ளாது என்றும் நம்பிக்கை தெரிவித்தார் அமைச்சர் ஓங்.

உயர்கல்வி மாணவர்களின் கல்விச் செலவில் உதவுவதற்கு ஓவ்வோர் ஆண்டும் சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியத்தின் கல்வி உதவி நிதி விருதுகள் பயனளித்து வருகின்றன.

இவ்வாண்டு 163 மாணவர்களுக்கு ஏறத்தாழ $290,000 வழங்கப்பட்டது.

இதில் 46 பேர் தொழில்நுட்பக் கல்விக்கழகங்களையும் 45 பேர் பலதுறைத் தொழில் கல்லூரிகளையும் சேர்ந்தவர்கள். மேலும் 45 பேர் உள்ளூர் பல்கலைக்கழகங்களையும் 27 பேர் தனியார் கல்வி நிலையங்களையும் சேர்ந்த மாணவர்கள்.

வருங்காலத்தில் தமிழ் ஆசிரியராக பணிபுரிய திட்டமிடும் 20 வயது குமாரி வி.துர்கா தற்போது நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரியில் தமிழ்க் கல்வியுடன் கூடிய ஆரம்பகாலக் கல்வி துறையில் படித்து வருகிறார்.

“என் அப்பா மட்டும்தான் என் குடும்பத்தில் பணிபுரிகிறார். எனக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இந்த நிதியுதவி என் குடும்பத்தின் கல்விக் கட்டண பாரத்தை குறைக்கும்,” என்றார் துர்கா. ஆறு உறுப்பினர்கள் கொண்ட குமாரி ரீதிகா மோகன்ராஜ் குடும்பத்தில் அவரின் தந்தை மட்டுமே பணிபுரிகிறார்.

“எல்லாருக்கும் கல்விக் கட்டணங்கள் கட்டுபடியாகும் வகையில் இராது. இதுபோன்ற வழிகளில் நிதியுதவி வழங்குவது முக்கியம்,” என்றார் அங் மோ கியோ தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் படித்து வரும் ரீதிகா.

“தனியார் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவோருக்குப் பெரும்பாலும் அரசாங்க சலுகைகள் கிடைப்பதில்லை. அதுபோக சிலர் வசதி குறைந்த அல்லது சவால்மிக்க பின்னணிகளிலிருந்தும் வருகின்றனர். பட்டம் பெற்று வாழ்வில் முன்னேற இதுபோன்ற நிபந்தனைகளற்ற நிதியுதவி நிச்சயம் உதவும்,” என்றார் சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியத்தின் கல்வி நிதித் தலைவர் திரு ந புருஷோத்தமன்.

இவ்வாண்டு ஆகஸ்ட் வரை 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மொத்தம் கிட்டத்தட்ட $3 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று காலஞ்சென்ற திரு சிவதாஸ் சங்கரனின் நினைவாக 2011லிருந்து இந்தக் கல்வி உதவி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!