தீபாவளி ஒளியூட்டு: ஜொலிக்கும் லிட்டில் இந்தியா

கிளி அலங்காரத்தோடு காட்சியளிக்கும் இவ்வாண்டின் தீபாவளி ஒளியூட்டை அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்றிரவு அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார். லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த ‘தீபாவளி உற்சவம்’ விழாவுடன் கூடிய சாலை அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏறத்தாழ 5,000 பேர் ஒன்று திரண்டனர். ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கிளி, பூக்கள், விளக்குகள் ஆகிய அம்சங்களால் சிராங்கூன் சாலை வண்ணமயமாக காணப்படுகிறது.
லிட்டில் இந்தியாவின் சாலைகளில் 63 ஒளி அமைப்புகள் பொருத்தப்பட்டு உள்ளன என்றும் இவ்வாண்டின் தீபாவளி ஓளியூட்டு கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவித்தார் லிஷாவின் கௌரவச் செயலாளர் திரு ப. ருத்திராபதி.

இசை, நடனம், நாடகம் உள்ளடங்கும் இவ்வாண்டின் தீபாவளி உற்சவம் நிகழ்ச்சி, சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவு, இந்தியர்களின் கலாசாரம் ஆகியவற்றைப் பறைசாற்றுகிறது.

தீபாவளிக் கொண்டாட்டங்களுக்காக லிஷாவின் முயற்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களையும் பல விதங்களில் ஆதரவளித்தவர்
களையும் அங்கீகரிக்கும் வண்ணம் நிகழ்ச்சியில் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
கிளி அலங்காரத்தோடு காட்சியளிக்கும் இவ்வாண்டின் தீபாவளி ஒளியூட்டை அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்றிரவு அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.

லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த ‘தீபாவளி உற்சவம்’ விழாவுடன் கூடிய சாலை அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏறத்தாழ 5,000 பேர் ஒன்றுதிரண்டனர்.

ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!