ஃபெராரி உள்ளிட்ட மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து அதன் ஓட்டுநரான 29 வயது பெண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (செப்டம்பர் 26) பிற்பகல் 2 மணி வாக்கில் பேஃபிரண்ட் அவென்யூவுக்கும் ஷியர்ஸ் லிங்கிற்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் இந்த விபத்து நடந்ததாக போலிஸ் தெரிவித்தது.
சாலைக்குள் மற்றொரு கார் வளைந்து சென்றதை அடுத்து, அந்த ‘ஃபெராரி’ கார் வெள்ளை கார் ஒன்றின் பிற்பகுதியை மோதியதைக் காட்டும் காணொளி, ‘ரோட்ஸ்.எஸ்ஜி’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.