‘மேம்பட்ட நிலையில் சிங்கப்பூர் பெண்கள் உள்ளனர்’

 

இவ்வாண்டின் நான்காவது தெற்காசிய புலம்பெயர் மாநாட்டில் புத்தாக்கம், அறிவார்ந்த நகரங்கள், வர்த்தக வாய்ப்புகளும் சவால்களும், கல்வி தொழில்நுட்பம் போன்ற அம்சங்களைத் தவிர்த்து, பெண்களின் நலனும் ஆராயப்பட்டது.

இம்மாநாட்டில் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, கல்வி துறைகளின் இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா ‘பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்’ எனும் தலைப்பைத் தொட்டு பேசினார்.

குறைந்த எண்ணிக்கையில் வேலையிடத்தில் பெண்கள் இடம்பெறுவது, வன்முறைக்கு அவர்கள் ஆளாவது, அடிப்படைக் கல்வித் தகுதிகளைப் பெறாதது போன்ற பிரச்சினைகள் தெற்காசியாவில் வாழும் பெண்களைப் பாதிக்கிறது என்று தமது உரையில் அமைச்சர் குறிப்பிட்டார். 

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே சில முன்னேற்றங்களைக் கண்டறிய முடிந்தது என்று கூறிய அமைச்சர், இந்தியாவை ஓர் உதராணமாகச் சுட்டினார்.

பெண்களை வேலை செய்ய ஊக்குவிக்கும் விதத்தில் சட்டதிட்டங்களில் மாற்றங்கள் செய்யப்

பட்டதோடு பிள்ளைப் பராமரிப்புக்கு அனுகூலங்களும் வழங்கப்படு

வதையும் அவர் உதாரணம் காட்டினார். 

பங்ளாதேஷும் பாகிஸ்தானும் பெண்களின் அரசியல் பங்கேற்பை ஆதரிக்க சட்டதிட்டங்களில் மாற்றங்களைக்கொண்டு வந்தது குறித்து பேசிய அமைச்சர், நிலைமை இன்னும் மேம்பட என்ன செய்யலாம் என்பதை தெற்காசிய நாடுகள் ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள, ஒருமித்த தீர்வு இல்லை என்று சொன்ன அமைச்சர், ஒவ்வொரு நாடும் அதனதன் தனித்துவ சூழ்நிலையைப் பொறுத்து தகுந்த வழிமுறைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்றார்.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதில்இருந்து பெண்களின் கல்வி, வேலை பங்கேற்பு, தலைமைத்துவம், பாதுகாப்பு குறித்த சட்ட திட்டங்கள் எவ்வாறு உருவாகின என்பதை அவர் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

கடந்த ஆண்டின் புள்ளி விவரம்படி, சிங்கப்பூரில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 95.9 விழுக்காடாக இருந்ததாகவும் சிங்கப்

பூரில் 48.5 விழுக்காட்டு பட்டதாரிகள் பெண்களாக இருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதோடு, 25 வயதிலிருந்து 54 வயதிற்கும் உட்பட்ட பெண்களின் வேலையிடப் பங்கேற்பு விகிதம் கடந்தாண்டு 80.8 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது 1995ஆம் ஆண்டில் 58% ஆக இருந்தது.

குடும்பப் பொறுப்புகளையும் வேலைப் பொறுப்புகளையும் பெண்கள் சமாளிக்க, அரசாங்கம் உத

விக்கரம் நீட்டி வருகிறது என்று 

குறிப்பிட்ட குமாரி இந்திராணி, 

பிள்ளைப்பேறு அனுகூலங்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதை விளக்கினார். 

தந்தைகளுக்கும் பிள்ளைகளை வளர்ப்பதில் முக்கிய பங்குண்டு என்பதை வலியுறுத்தும் வகையில் அதில் சில அனுகூலங்கள் இடம்பெறுகின்றன என்றார்.

தொழிற்சங்கங்களில் பெண்

கள் உறுப்பினர்களாகச் சேரவும் தலைமைத்துவப் பொறுப்புகளை கையாளவும் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று கூறிய அமைச்சர், தற்போது சிங்கப்பூர் அமைச்சரவையில் மூன்று பெண்கள் அமைச்சர்களாக இருப்பதை

முன்னேற்றத்திற்கு அறிகுறி என்று வலியுறுத்தினார்.

“தற்போது, தனியார் துறையில், போதுமான பெண்கள் நிறுவன இயக்குநர் குழுவில் இடம்பெறுவதில்லை. இந்த நிலைமையை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

“நிறுவனங்களிலும் அமைப்பு களிலும் உயர்மட்டப் பொறுப்புகளில் பெண்–களை அமர்த்–தும் ஆலோ–சனை மன்–றம் (Council for Board Diversity) இம்–மு–யற்–சி–களில் தீவி–ரம்காட்டி வரு–கிறது,” என்றும் குமாரி இந்திராணி கூறினார்.