திருமணப் பந்தத்தை வலுப்படுத்த உதவும் திருமணப் பதிவாளர்கள்

திருமண நாள் வந்தது. ஆனால், அலங்காரங்களோ, மேள தாளமோ, விருந்தினர் கூட்டமோ இல்லை. மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தந்தை கண்முன்னே அவரது மகளின் பதிவுத் திருமணத்தை நடத்தி வைத்தார் திரு ராஜா மோகன்.

படுக்கை அறையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் தந்தை ஒரு பக்கம்.

அவரது நிலையைக் கண்டு மனம் வெதும்பிய நிலையில் குடும்பத்தினர் எழுவர் மறுபக்கம் நின்றிருக்க தம்பதியினருக்கு பதிவுத் திருமணம் செய்யவேண்டிய நிலையில் திரு ராஜா மோகன் இருந்தார்.

இருந்தபோதும், அந்தத் தந்தையின் மனமார்ந்த ஆசியுடன் அவரின் மகளின் பதிவுத் திருமணத்தை மருத்துவமனையில் நடத்தி மகிழ்ச்சி சேர்த்தார் திரு ராஜா மோகன்.

பொறியாளரான திரு ராஜா மோகன், இதுவரை 290க்கு மேற்பட்ட பதிவுத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே சமூக சேவையின்மீது அதீத ஆர்வம் கொண்ட அவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அண்டை வீட்டாரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவரும் அவரது குடும்பத்தினரும் ஈடுபட்டனர். சமரசத்திற்கான ஆசை அவரது மனதில் மெல்ல வளர்ந்தது.

பொறியாளராக பல நாடுகளில் பணிபுரிந்த திரு ராஜா மோகன், சமூக சேவையின் மீதுள்ள ஆர்வத்தினால் ‘சன்லவ்’ இல்லத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராகச் சேர முடிவு செய்தார்.

வருமான ரீதியில் அவர் சிறிதளவு இழப்பைச் சந்தித்திருந்தாலும் சமூக மேம்பாட்டுக்காக அவர் எடுத்த முயற்சி மனநிறைவைத் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பிறகு அவர் திருமணப் பதிவாளராகச் சேவையாற்ற ஆரம்பித்தார். இதனை கடந்த 14 ஆண்டுகளாக செய்துவரும் அவர் தாம் பெற்றுள்ள அனுபவங்களைப் பற்றி தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

“வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த ஜோடிகளைச் சந்தித்துள்ளேன். வீடுகளிலும் கோவில்களிலும் திருமணத்தை எளிதாக நடத்தியவர்களைக் கண்டுள்ளேன். அதே சமயம் செந்தோசா போன்ற சொகுசு இடங்களில் ஆடம்பரமாக நடைபெறும் திருமணங்களிலும் சேவை ஆற்றியுள்ளேன்.

“இடம் என்னவாக இருந்தாலும் குடும்பத்தினரின் ஆசியும் இறுதி வரை திருமணம் நீடிக்கவேண்டும் என்ற நம்பிக்கையும்தான் ஒரு திருமணத்திற்கு முக்கிய அம்சங்கள்,” என்றார் அவர்.

அந்த வகையில் வெளிநாட்டு ஊழியருக்கும் உள்ளுர் மாணவிக்கும் இடையே நடக்கவிருந்த பதிவுத் திருமணத்திற்கு நீண்ட நாட்களாக அம்மாணவியின் தந்தை மறுப்பு தெரிவித்து வந்தார்.

அது குறித்து அத்தந்தைக்கு ஆலோசனை அளித்து அவரின் மனதை மாற்றி அவரது மகளுக்கு பதிவுத் திருமணத்தை நடத்தினார் திரு ராஜா மோகன்.

திருமணத்திற்கு முன் வரும் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் அதற்குப் பின் வரும் சிக்கல்களையும் திரு ராஜா மோகன் தீர்த்து வைப்பார்.

“நான் பதிவுத் திருமணம் செய்து வைத்த தம்பதியினர்களில் ஒரு ஜோடியை எதிர்பாராத விதமாகச் சந்தித்தபோது அவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக என்னிடம் கூறினார்கள்.

“அதைக் கேட்டு சற்று அதிர்ச்சி யடைந்த நான் ஒருமுறை அவர்களுக்கு திருமணப் பந்தம் குறித்து ஆலோசனை அளித்தேன். சில காலத்துக்குப் பின் அவர்களை மீண்டும் சந்தித்தபோது அவர்களது குழந்தையை என்னிடம் காட்டினர். அது எனக்கு வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

“திருமணப் பதிவாளரின் பணி அத்திருமணத்தை நடத்தி வைப்பதோடு முடிந்துவிடாது. திருமணத் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழிகாட்டிகளாகவும் திருமணப் பதிவாளர்கள் திகழலாம்,” என்று 59 வயது திரு ராஜா மோகன் விவரித்தார்.

தற்போது சன்லவ் இல்லத்தில் தலைமைத் திட்ட அதிகாரியாகப் பணியாற்றிவரும் திரு ராஜா மோகன், திருமணப் பதிவாளராக இருப்பதுடன் சமூக சமரச நடுவராகவும் மற்ற பல சமூக சேவை களில் துடிப்புடன் ஈடுபடும் தொண்டூழியராகவும் தமது சமூகப் பங்களிப்பை ஆற்றி வருகிறார்.

திருமணப் பதிவகமும் முஸ்லிம் திருமணப் பதிவகமும் சேர்ந்து மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்திருக்கும் திருமணக் கொண்டாட்டங்களுக்கான பொன் விழா (Golden Jubilee weddings) அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

நீண்ட காலத்திற்கு நீடிக்கும் திருமணங்களைக் கொண்டாடுவதற்கும் 50 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக வாழ்ந்துவரும் தம்பதியினரை அங்கீகரிப்பதற்கும் இந்தப் பொன் விழா நடத்தப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தில் பங் கேற்க தங்களைப் பதிவு செய்துகொள்ள விரும்பும் தம்பதியினர் 6338 7808 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!