இந்த விடுமுறைக் காலத்தில் சாங்கி விமான நிலையத்தை அதிகமாகப் பயன்படுத்தும் பயணிகளைச் சமாளிக்க கூடுத லான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் தினத்துக்கு முந்திய வாரயிறுதியில் பயணிகள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்வார்கள் என்றும் கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி மட்டும் ஒரேநாளில் 221,000 பயணிகள் சாங்கியைப் பயன்படுத்தினர் என்றும் குழுமம் கூறியது. மேலும் ஜுவல் பொழுதுபோக்குத் தளத்துக்கும் செங்காங் எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையே இம்மாதம் 24, 31ஆம் தேதிகளில் இலவச இணைப்புப் பேருந்துகள் செயல்படும்.