சிங்கப்பூரின் வயது 700 இல்லை, 1,000 ஆக இருக்கலாம்: ஆய்வு

சிங்கப்பூருக்கு 700 வயதாகிறது. இது இன்றுவரை அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. ஃபோர்ட் கேனிங் நிலையத்தில் நடைபெறும் இருநூற்றாண்டு கண்காட்சியிலும் இந்தக் கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு புதிய ஆய்வு சிங்கப்பூர் மேலும் 300 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம், அதாவது சிங்கப்பூரின் வயது 1,000 ஆக இருக்கலாம் என்று கூறுகிறது.

ஆஸ்திரேலிய ஆய்வாளர் திரு இயன் சின்கிளேர் கண்டுபிடித்த உண்மைகள் இம்மாதம் இந்திய மரபுடைமை நிலையம், கொள்கை ஆய்வுக்கழகம் ஆகியவை வெளி யிட்ட ‘ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ எனும் நூலிலும் இடம்பெற்றுள்ளன.

தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்தின் யூசோஃப் இஷாக் கழகத்தின் முன்னாள் வருகை தரும் ஆய்வாளரான டாக்டர் சின்கிளேர், புரியாத புதிரான ‘சிங்கப்பூர்க் கல்’ - பண்டைகாலத்து மணற்கல் துண்டு பற்றி கடந்த ஆறு மாதங்களாக ஆய்வு நடத்தியுள்ளார்.

சிங்கப்பூர் ஆற்றின் முகத்து வாரத்தில் அமைந்திருந்த 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிங்கப் பூர்க் கல்லில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளை ‘காவி’ (Kawi -பழைய ஜாவி) மொழி என்று கூறும் ஆய்வாளர் இயன் சின் கிளேர், அதில் கேசரி வர்மா என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

பரகேசரி வர்மா என்பது பல சோழ மன்னர்களுக்குக் கொடுக் கப்பட்டிருந்த பட்டம். இதன் மூலம் 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுக்கு சிங்கப்பூருடன் தொடர்புகள் இருந்தன என்பதைக் குறிக்கிறது என்று கூறுகிறார் முனைவர் இயன் சின்கிளேர்.

தென்கிழக்காசியாவில் தமிழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருவதை புதிய அகழாய்வுகளும், தகவல்களும் உறுதி செய்வதை இவரது கட்டுரையுடன் மற்ற பல கட்டுரைகளும் விளக்கிக் கூறுகின்றன.

‘செஜாரா மலாயு’ எனும் புராண வரலாற்றுக் குறிப்புகளில் சிங்கப் பூர் 700 ஆண்டுகளுக்கு முன் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது என்று வரலாற்று நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதில் பலேம்பாங் இளவரசன் சங் நீல உத்தமன் 1299ஆம் ஆண் டில் இத்தீவில் ஒரு நகரத்தை அமைக்க முடிவெடுத்ததாகக் குறிப்பு உள்ளது.

சீனக் குறிப்புகள் சீனக் குடியேறிகள் 1330களில் இங்கு வேறூன்றத் தொடங்கினர் என்று கூறுகின்றன.

இது குறித்து கருத்துரைத்த இந்திய மரபுடைமை நிலையத்தின் பொறுப்பாளரான குமாரி நளினா கோபால், “இந்தப் புதிய கண்ணோட்டம் அறிவுபுகட்டுவதாக உள்ளது. சிங்கப்பூரர்கள் என்ற முறையில், பிரிட்டிஷார் சிங்கப்பூரில் காலடி எடுத்துவைத்த ஆண்டிலிருந்து 200வது ஆண்டு நிறைவை இப்போது அனுசரித்துக்கொண்டிருக்கிறோம்.

“டாக்டர் சின்கிளேரின் கண்டு பிடுப்பின்படி சிங்கப்பூரின் வரலாறு 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தாக இருக்கக்கூடும். ஆக, வரலாற்றையும் மரபுடைமையையும் மீண்டும் புரட்டிப்பார்க்க வாய்ப்பு ஏற்படக்கூடும்,” என்று விவரித்தார்.

சிங்கப்பூர்க் கல் பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற குமாரி நளினாவின் விருப்பம் தமக்கு ஊக்கமளித்ததாகக் கூறும் டாக்டர் சின்கிளேர், “சிங்கப்பூர்க் கல்லின் மூன்று பகுதிகள் பற்றிய விவரங்களை இந்தோனீசிய ‘காவி’ நிபுணர் தித்தி சுர்தி நஸ்தித்தி மூலம் பெற்று அவற்றை வரைவுப் படிவங்களாக குமாரி நளினா வைத்துள்ளதை அறிந்ததும் தாம் இந்த ஆய்வில் பங்கேற்க மேலும் உற்சாகம் தோன்றியது,” என்றார்.

இம்மாதம் 7ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்தில் நடை பெற்ற மாநாட்டில் டாக்டர் சின்கி ளேர் தமது கண்டுபிடிப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!